“இருவர் உள்ளம்”

1963 இல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,பி.சரோஜாதேவி.எம்.ஆர்.ராதா.எஸ்.வி.ரங்காராவ்.சந்தியா,ஏ.கருணாநிதி
,பாலாஜி,டி.ஆர்.ராமச்சந்திரன்,ராமாராவ், பத்மினி பிரியதர்ஷினி,முத்துலட்சுமி, ஆகியோர் நடிப்பில் “இருவர் உள்ளம்” திரைப்படம் வெளியாகி இன்றுடன் 58 ஆண்டுகள் நிறைவடைகின்றது .லட்சுமி திரிபுரசுந்தரி எழுதிய “பெண் மனம் “என்ற நாவலை கலைஞர் கருணாநிதி வசனம் தீட்ட எல்.வி.பிரசாத்தின் இயக்கத்தில் ,கே.வி.மகாதேவன் இசையில் அமைந்த வெற்றிப்படம். இப்படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் அருமை. நதியெங்குகே போகிறது,பறவைகள் பலவிதம்,இதய வீணை தூங்கும் போது,புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை,கண்ணெதிரே தோன்றினாள்,ஏன் அழுதாய் போன்றன பிரமாதம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் செல்வம் என்ற பாத்திரத்தில் அருமையாக நடித்திருப்பார்.கலைஞரின் பேனாவின் சொல்லோவியம்  இப்படத்திற்கு பெருந்துணையாய் அமைந்தது. இது சிவாஜி கணேசனின் 87 வது படம். அனைவரும் பார்க்க வேண்டிய அருமையான படம் “இருவர் உள்ளம்”.
இப்படத்தின் இயக்குனர் எல்.வி.பிரசாத்தின் கற்பனையை நன்குணர்ந்து,அதற்கேற்றவாறு சிவாஜி கணேசன் நடித்ததாக பலரும் பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.இப்படத்திற்கு பல விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

எஸ்.கணேசன் ஆச்சாரி

சதீஷ் கம்பளைஇலங்கை..