ஊரடங்கில் வேலைவாய்ப்பின்மை
கொரோனா ஊரடங்கு தொடங்குவதற்கு முன்பே, தமிழகத்தில், வேலையின்மை அதிகரிப்பு, முக்கிய பிரச்னையாக இருந்தது. தேசிய மாதிரி ஆய்வு விபரங்களில், அது வெளிப்படையாக தெரிந்தது. ஊரடங்கு, அந்த நிலைமையை மேலும் மோசமாக்கி விட்டது. இளைஞர்களிடம் வேலையின்மை பிரச்னையை சுட்டிக்காட்டி பேச, எந்த புள்ளி விபரமும் தேவையில்லை. அதே சமயத்தில், குடும்பத்தின் தேவைகளுக்காக, ஒரு ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஓட்டி வருகிறார். இது, ஒரு உதாரணம் மட்டுமே. தனது கல்விக்கும், உழைப்புக்கும் ஏற்ற கூலியை கொடுக்கிற வேலையே, நம் இளைஞர்களின் விருப்பமாக இருக்கிறது. குறைந்தபட்ச சட்டபாதுகாப்புள்ள சூழலில், நிரந்தரமான வேலைக்காக கனவு காண்கிறார்கள். ஆனால், நடைமுறையில், எந்த நிரந்தரமும், பணி பாதுகாப்பும் இல்லாத வேலையை கூட, தன் குடும்ப தேவைகளுக்காக, ஏற்று செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
இந்த சூழலின் காரணமாக, வேலையின்மையின் உண்மை நிலைமை, எந்த புள்ளி விபர கணக்கிலும் அடங்குவதில்லை. சரியாக, வெளிப்படுத்த முடிவதுமில்லை. அதனால் தான், வேலைவாய்ப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து, தி.மு.க.,வும், இடதுசாரிகளும் தங்கள் தேர்தல் அறிக்கைகளில், அதுபற்றி வாக்குறுதி அளித்துள்ளன. தமிழகத்தில் வசிப்போருக்கு தனியார் துறைகளில், 75 சதவீத இட ஒதுக்கீடு என்ற, முழக்கத்தை தி.மு.க., வைத்துள்ளது. நகர்ப்புறங்களுக்கும், ‘வேலை உறுதி திட்டத்தை’ விரிவாக்க வேண்டும் என்கிறார்கள் இடதுசாரிகள். ஆனால், வேலைவாய்ப்பு பிரச்னை, இந்த வாக்குறுதிகளோடு முடிந்து விடுவதில்லை. தனியார் துறை முதலீடுகளை ஈர்ப்பதற்கு, அரசு பல சலுகைகள் வழங்குகிறது. ஆனால், அப்படி உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகள், மிக சொற்பமாகவே இருக்கின்றன. நிரந்தர தன்மை இல்லாமல்,ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை அமர்த்துகிறார்கள். இந்த சமயத்தில் தான், அரசு பணியில் உள்ளவர்களின் ஓய்வுபெறும் வயது, 60 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
செய்தி – செந்தில்நாதன் இணை ஆசிரியர்
தமிழ்மலர் மின்னிதழ்