நல்லமருந்து! நம்ம நாட்டு மருந்து! – தொடர் – 52

அறுசுவைகளில் ஒன்றான கார சுவை வரிசையில் கோதுமை உள்ளது என்று சித்த மருத்துவ குறிப்புகள் கூறுவது அனைவருக்கும் வியப்பாகத்தான் இருக்கும்….!

தற்போது பெரும்பாலானோர் கோதுமையால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களைத் தான் அதிகம் சாப்பிடுகிறார்கள்.

எனவே இரத்தத்தை சுத்தப்படுத்தும் கோதுமையை தினமும் உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்தமாகும்.
கோதுமைப் பொருட்களை சாப்பிட்டால் உடல் எடை குறையும்.
மைதாவை தவிர்த்து, கோதுமையை சாப்பிடுவது மிகவும் நல்லது.
காரணம் கோதுமை செரிமானத்தை சீராக வைக்கும், கோதுமையில் இருந்து பிரிக்கப்படும் மைதாவை அதிகம் சாப்பிட்டால், செரிமான பிரச்சனை ஏற்படும்.
எனவே கோதுமையை சாப்பிட்டால், அது எளிதில் செரிமானமாகும்.
இதய நோய் இதய நோய் உள்ளவர்கள், கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இதயம் வலிமையாக இருக்கும். புற்றுநோயை தடுக்கும்.
கோதுமையில் புற்றுநோயைத் தடுக்கும் வைட்டமின் ஈ, செலினியம் மற்றும் நார்ச்சத்து இருக்கிறது.
கோதுமை ரொட்டி உயர் இரத்த அழுத்தம் ஏற்படாதவாறு பாதுகாக்கும்.
தைராய்டினால் அவஸ்தைப் படுகிறவர்களுக்கு கோதுமை மிகச்சிறந்த நிவாரணி…!
வாய் துர்நாற்றம் உள்ளவர்கள், கோதுமை உணவை அதிகம் சாப்பிட்டு வந்தால், வாய் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம். ஏனெனில் கோதுமையில் உள்ள குறிப்பிட்ட வைட்டமின்கள் வாய் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தும். எலும்பு அழற்சி எலும்பு அழற்சி உள்ளவர்கள் தினமும் டயட்டில் கோதுமை ரொட்டி அல்லது பிரட் சேர்த்து வந்தால், அது எலும்புகளில் ஏற்படும் அழற்சியைத் தடுக்கும். நீரிழிவு நீரிழிவு நோயாளிகள், இன்சுலின் சுரப்பை சீராக வைப்பதற்கு கோதுமையை உணவில் சேர்த்து வருவது நல்லது. மலச்சிக்கல் மலச்சிக்கல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கும் போது, கோதுமையால் செய்யப்பட்ட சப்பாத்தியை சாப்பிட்டால், அதில் உள்ள நார்ச்சத்து வயிற்றில் உள்ள பிரச்சனையை சரிசெய்து, மலச்சிக்கலில் இருந்து விடுதலைத் தரும்.
சிறுநீரக பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற தினமும் கோதுமையை உணவில் சேர்த்து வர வேண்டும். இதனால் சிறுநீரக கற்கள் ஏற்படுவது தடுக்கப்படும். இரத்த சோகை உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமானால், கோதுமை உணவுப் பொருட்களை உணவில் சேர்த்து வாருங்கள். இது சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கக்கூடியவை. புரோட்டீன் நிறைந்தவை கோதுமையில் புரோட்டீன் அதிகம் உள்ளது. எனவே பால் பிடிக்காதவர்கள், கோதுமை சப்பாத்தி அல்லது கோதுமை பிரட் போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்து வாருங்கள்.
குறிப்பாக கோதுமையில் இருந்து பிரிக்கப்படும் வெள்ளை ரவை அதாவது பட்டணரவை என்று குறிப்பிடுவார்கள் மற்றும் மைதா மாவு, ஆட்டா மாவு… அதாவது கோதுமை மாவு…! இந்த ஆட்டா மாவுக்கு மட்டும்தான் எளிதில் ஜீரணம் ஆகக் கூடிய தன்மை உள்ளது.
என்பதை அனைவரும் கவனம் கொள்ள வேண்டும்…!
எதையும் வரும் முன் காப்போம்…!
நல்ல (உணவு) மருந்து…! நம்ம நாட்டு (உணவு) மருந்து…
தொகுப்பு:- சங்கரமூர்த்தி… 7373141119