“பாரத விலாஸ்”

1973 இல் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பில் இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஏற்றவாறு ஓர் கதையை அமைத்து இயக்குனர் ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில் உருவான “பாரத விலாஸ்”வெள்ளிவிழா திரைப்படம் வெளியாகி இன்றுடன் 48 வருடங்கள் நிறைவடைகின்றது .இப்படத்தில் இடம்பெற்ற “சக்கப் போடு போடு ராஜா”பாடல் காட்சியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பு பிரமாதம்.தமிழ்நாடு,பஞ்சாப்,ஆந்திரம்,கேரளம் போன்ற மாநிலங்களில் உள்ள குடும்பங்கள் ஒரே வீட்டில் வசிப்பதாக திரைக்கதையை இந்திய தேசிய ஒருமைப்பாட்டுக்கு அமைய படத்தை உருவாக்கி வெற்றி கண்டனர்.இப்படத்திற்கு பிஃலிம்பேஃர் விருதும் கிடைத்தது.”இந்திய நாடு என் வீடு”என்ற பாடலும் அருமை. இது சிவாஜியின் 161 வது படமாகும்.
Sgs இலங்கை