நவாம்ச சக்கரத்தின் முக்கியத்துவம்?

ஜாதகம் கணிக்கும் சமயத்தில் ராசிக் சக்கரம் இருக்கும் போது… பிறகு, ஏன் நவாம்ச சக்கரம் வேறு எழுதப்படுகிறது?!… எனில், அதன் முக்கியத்துவம் தான் என்ன?!…

ராசியை ஒன்பது கூறுகளாக பிரிப்பது நவாம்சம் ஆகும். இதன் அடிப்படையில், ராசியில் உள்ள ஒரு கிரகம் ஆட்சி, உச்சம், நீசம், போன்ற ஸ்தான பலன்களை பெற்று இருக்கும் போது குறிப்பிட்ட அந்த கிரகம், அதே பலத்தோடு உண்மையில் இருக்கின்றதா அல்லது பலம் இழந்து இருக்கின்றதா? என்பதை அறிய உதவும் ஒரு டெலஸ்கோப் தான் இந்த நவாம்ச சக்கரம் ஆகும். இதனை “அம்ச சக்கரம்!” என்றும் கூட சிலர் அழைப்பதுண்டு.

பொதுவாக ஜோதிடத்தில் ஒரு பழமொழி உண்டு…சாரம் பாக்காதவன் சோரம் போவான்…. இந்த கிரகங்கள் ஏறியிருக்கும் சாரத்தை அடிப்படையாகக் கொண்டது தான் இந்த அம்ஸ சக்கரம்… சாரம் பார்க்காமல் பலன் சொல்லுதல் என்பது உண்மையில் வீண் தான். ஆகவே, இந்த வகையில் தான் நவாம்ச சக்கரம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

மொத்தத்தில் நவாம்ச சக்கரம் கொண்டு ஜாதகத்தில் கிரகங்களின் வலிமைத் தன்மையை உறுதி செய்து எளிதில் பலன் சொல்லி விட இயலும்.

உதாரணமாக ரிஷப ராசியில் பிறந்த ஒருவருக்கு சனி பகவான் உச்சம் பெற்று ராசி சக்கரத்தில் துலாம் இல் இருக்கிறார். அதுவே அம்சத்தில் மேஷ ராசியில் நீச்சம் பெற்று இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்நிலையில் சனி உண்மையில் பலம் பெற வில்லை என்று தான் அர்த்தம்.

அதேபோல, ஒரு கிரகம் ராசிச் சக்கரத்தில் ரிஷபத்தில் உள்ளது. அதே கிரகம், அம்ச சக்கரத்திலும் கூட ரிஷபத்தில் காணப்படுகிறது என்றால்… அந்தக் கிரகம் வர்கோத்தமம் பெற்று உள்ளது என்று அர்த்தம். அதாவது அக்கிரகம் புண்ணிய கிரகமாக அல்லது அந்த ஜாதகத்திற்கு சுப கிரகமாக இருக்கும் பட்சத்தில் தனது தசை அல்லது புத்தியில் அதிக அளவில் நல்ல பலன்களை தரும். அதுவே, அப்படியாக வர்கோத்தமம் பெற்ற கிரகம் பாவ கிரகம் அல்லது தீய கிரகம் எனில் குறைவான கெடு பலன்களைத் தரும். மொத்தத்தில் கிரகங்கள் வர்கோத்தமம் பெறுவது நல்லது. இதனை உறுதி செய்யவும் நவாம்ச சக்கரம் நமக்கு உதவுகிறது. உறுதுணையாக காணப்படுகிறது.

மொத்தத்தில் ராசிக் கட்டத்தில் காணப்படும் கிரகங்களின் உண்மை நிலையை அறிய… நவாம்சம் ஒரு அளவு கோலாகவே காணப் படுகிறது.

ஜோதிட ஆய்வில்
Astro செல்வராஜ்
Cell : 9842457912
வே. இராஜவர்மன் டில்லி தலைமை ஆசிரியர்