உலகத் திருக்குறள் மையம்
கவிதைப் போட்டி
பரிசுத் தொகை ரூ. 10000
உலகத் திருக்குறள் மையத்தின்
பொருளாளர் அருள்திரு திருக்குறள் தூதர் சு. நடராசன் அவர்கள்.
திருக்குறள் பரப்பியலாக்கப் பணிகள், ஆய்வியலாக்கப் பணிகள். வாழ்வியலாக்கப் பணிகள் என்னும் முத்திறப் பணிகளிலும் கால்பதித்துச் சாதனைகள் படைத்து வருபவர்.
ஏழைகளுக்கு உதவல், கல்வி கற்க உதவல் போன்ற சமூகப் பணிகளையும் செய்து வருகிறார்.
அவர்களின் திருக்குறள் மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து
‘ வள்ளுவத்தை வாழ்வியலாக்கும் வள்ளல்
சு. நடராசன்’ என ஒரு நூல்
வெளியிட்டுள்ளோம்.
கடந்த 10 ஆண்டுகளில் வள்ளுவர் கோட்டத்தில்
ரூபாய் ஏழு இலட்சங்களுக்கு மேல் செலவிட்டுள்ளார்.
நடுத்தரக் குடும்பத்தில் உள்ள ஒருவர் இந்த அளவிற்குச் செலவு செய்திருப்பது வியக்கத்தக்க ஒன்றே.
அவருடைய திருக்குறள் தொண்டுகளைப் பாராட்டும் வகையில் 133 கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்து
‘வள்ளுவத்தை வாழ்வியலாக்கும் வள்ளல்’ என்னும் பெயரில் ஒரு நூல் வெளியிட உள்ளோம்.
கவிஞர்கள் 16 அடிகளில் ( 32 சீர்கள்/சொற்கள்) அவரைப்
பற்றி ஒரு கவிதை வழங்க வேண்டுகிறோம்.
கவிதை, மரபுக் கவிதையாகவும் இருக்கலாம்; புதுக்கவிதையாகவும் இருக்கலாம்.
சிறந்த கவிதைக்கு
முதல் பரிசு. : ரூ. 5000
2-ஆவது பரிசு. : ரூ. 3000
3-ஆவது பரிசு. : ரூ. 2000
அவரைப் பற்றிய நூலை அன்பளிப்பாக ப் பெற,
தொடர்பு கொள்ள வேண்டிய
அ. பே. 9444075385
( சு. நடராசன்)
கவிதை அனுப்ப வேண்டிய முகவரி
அருள்திரு திருக்குறள் தூதர்
சு. நடராசன்
தி இராயல் கேசுட்டில்
ஜெ. பிளாக், எண். 201,
திருமுடிவாக்கம்,
சென்னை -, 600132