வாழும் வள்ளுவன்

இன்றும் வாழும் வள்ளுவன் __ செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்; அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.(குறள் எண்:0411)

மு.வ உரை:

செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.

திண்டுக்கல் ஷாஜஹான் உரை:

செல்வங்களில் முதன்மையான செல்வம் செவி வழியாகப்பெறும் செல்வமே ஆகும்
திருக்குறள் பரப்புரைஞர் அ.ஷாஜஹான், அரசுப்பள்ளி ஆசிரியர் திண்டுக்கல் மாவட்டம் _