திருவொற்றியூர் மண்டலம் வேட்புமனு தாக்கல்

திருவொற்றியூர் மண்டலம் 1ல் நாளை வருகிற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சி பிரமுகர்கள் மண்டல அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். திருவொற்றியூரில் தேர்தல் நடத்தும் அலுவலர் அறை, மண்டல அலுவலகம் வாயில், 100 மீட்டர் குறியீடு ஆகிய பகுதிகளில் 3 கண்காணிப்பு கேமராக்களை அமைத்து தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்யும் நபர்கள் கூட்டத்தினரை 100 மீட்டர் அளவு நிறுத்தி வேட்பாளருடன் 2 நபர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட உள்ளது . அப்போது வண்ணாரப்பேட்டை பொறுப்பு துணை ஆணையர் சாமிநாதன் IPS மற்றும் திருவொற்றியூர் உதவி ஆணையர் ஆனந்தகுமார் மற்றும் திருவொற்றியூர் ஆய்வாளர் சுந்தர் ஆகியோர் உடனிருந்தனர்.

எஸ் செந்தில்நாதன்

தமிழ்மலர் இணைஆசிரியர்