நல்ல மருந்து! நம்ம நாட்டு மருந்து! – தொடர் – 48

துவர்ப்பு சுவையுடன் உப்பு இனிப்பு சுவை கலந்துள்ளது பீட்ரூட்…. புற்றுநோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள், பீட்ரூட் ஜூஸ் தினமும் 1 டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயை குணமாக்கும் வல்லமை படைத்தது பீட்ரூட்.

 பீட்ரூட் உடலில் உள்ள இரத்த கழிவுகளை நீக்கி உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. மேலும் கண்களுக்கு பார்வை திறனை அதிகரிக்கிறது.

பீட்ரூட் சாறு செரிமான கோளாறை நீக்கும். இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்க செய்யும்.

பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும், பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக்.

  பீட்ரூட் முகப்பொலிவை கூட்டும். பீட்ரூட் சிறு நீரக எரிச்சலை குறைக்கிறது.

  அல்சர் உள்ளவர்கள் பீட்ரூட் சாறுடன் தேன் கலந்து சாப்பிட குணமாகும்.

 பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

  உடல் சோர்வு, மன அழுத்தத்தை குறைத்து உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

இத்தனை நல்ல மருத்துவம் கொண்ட பீட்ரூட்டை ஒருவர் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் ஒருசில பக்கவிளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்…  யாரெல்லாம் பீட்ரூட் அல்லது அதன் ஜூஸை குடிக்கக்கூடாது என்பது கவனமாக படிக்கவும்

ஒருவர் பீட்ரூட் ஜூஸை அளவுக்கு அதிகமாக குடித்தால், அதனால் உடலினுள் குறிப்பிட்ட உலோகங்களான காப்பர், மக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் பாஸ்பரஸ் போன்றவை தேங்க ஆரம்பிக்கும். அதிலும் ஹீமோகுரோமடோடிஸ் பிரச்சனை இருப்பவர்கள், பீட்ரூட் ஜூஸைக் குடிப்பதாக இருந்தால் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் ஏற்கனவே இந்த குறைபாட்டினால், உடலில் இரும்புச்சத்தின் தேக்கம் அதிகம் இருக்கும். இந்நிலையில் இப்பிரச்சனை இருப்பவர்கள் இந்த ஜூஸைக் குடித்தால் நிலைமை மோசமாகிவிடும்.

ஏற்கனவே சிறுநீரக கோளாறு இருப்பவர்கள், பீட்ரூட் ஜூஸ் குடிப்பதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் பீட்ரூட்டில் உள்ள பீட்டைன், உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்துவிடும். ஆகவே சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள், பீட்ரூட் ஜூஸைக் குடிப்பதாக இருந்தால், மருத்துவரிடம் ஆலோசித்த பின் குடியுங்கள்.

பீட்ரூட் ஜூஸை தினமும் குடிப்பவராக நீங்கள்? உங்களது எலும்பு வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டுமானால், பீட்ரூட் ஜூஸ் குடிப்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் பீட்ரூட் ஜூஸ் குடித்தால், உடலில் கால்சியத்தின் அளவு குறையும். இதன் விளைவாக குறிப்பிட்ட எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

ஒரு பெண்ணின் வாழ்வில் கர்ப்ப காலம் என்பது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலமாகும். இக்காலத்தில் உண்ணும் உணவுகளின் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக பீட்ரூட் சாப்பிடுவதில் கவனம் தேவை. ஏனெனில் பீட்ரூட்டில் உள்ள பீட்டைன் தீங்கு விளைவிக்கக்கூடியவை. ஆகவே பிரசவம் முடியும் வரை பீட்ரூட் ஜூஸை குடிக்காமல் இருப்பதே நல்லது. வேண்டுமானால் எப்போதாவது ஒருமுறை பீட்ரூட்டை பொரியல் செய்து சாப்பிடலாம்.

அளவுக்கு அதிகமாக பீட்ரூட் ஜூஸைக் குடித்தால், தற்காலிகமாக குரல் நாண்களில் இடையூறு ஏற்பட்டு, பேச முடியாமல் போகலாம். ஆகவே பீட்ரூட் ஜூஸ் தயாரிப்பதாக இருந்தால், அத்துடன் சிறிது செலரி அல்லது கேரட் சேர்த்து தயாரித்துக் குடியுங்கள். குறிப்பாக அளவாக குடிக்க வேண்டும்.

மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள் பீட்ரூட்டை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம் என்று பலர் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். இது உண்மை தான். ஆனால் பீட்ரூட் ஜூஸை ஒருவர் அளவுக்கு அதிகமாக குடித்தால், அதனால் வயிற்றுப் போக்கு ஏற்படும். எனவே அளவாக குடித்து நன்மைப் பெறுங்கள்.

பீட்டூரியா என்ற பெயரைக் கேட்டதும், பெரிய நோயோ என்று அச்சம் கொள்ள வேண்டாம். இது மலம் மற்றும் சிறுநீரின் நிறம் சிவப்பு அல்லது பிங்க் நிறத்தில் இருப்பதைக் குறிப்பதாகும். எவர் ஒருவர் அளவுக்கு அதிகமாக பீட்ரூட் ஜூஸைக் குடிக்கிறார்களோ, அவர்கள் இந்நிலையை சந்திப்பார்கள். எனவே அடுத்த முறை உங்கள் சிறுநீர் அல்லது மலம் பிங்க் நிறத்தில் இருந்தால், அதற்கு நீங்கள் குடிக்கும் பீட்ரூட் ஜூஸைத் தான் குறை கூற வேண்டும்.

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற பீட்ரூட் ஜூஸை பயன்படுத்தும் போது, கல்லீரலில் ஏராளமான டாக்ஸின்கள் தேங்கி, கல்லீரலை நச்சுமிக்கதாக்கிவிடும். ஆகவே உங்களுக்கு ஏற்கனவே கல்லீரல் பிரச்சனைகள் இருந்தால், பீட்ரூட் ஜூஸை அதிகமாக குடிக்காதீர்கள். வேண்டுமானால், அளவாக எப்போதாவது ஒருமுறை குடிக்கலாம்.

சகிப்புத்தன்மை குறைவாக இருப்பவர்கள் பீட்ரூட் ஜூஸைக் குடித்தால் சந்திக்கும் ஓர் பொதுவான பிரச்சனை தான் வாந்தி. சிலர் இந்த ஜூஸை அதிகமாக குடிக்கும் போது, வாந்தியுடன், உடல் பலவீனத்தையும் உணர்வார்கள். சுத்தமான பீட்ரூட் ஜூஸ் மிகவும் சக்தி வாய்ந்தது. இதனை பலவீனமாக இருப்பவர்கள் அல்லது குமட்டல் உணர்வு கொண்டவர்கள் குடிப்பதைத் தவிர்ப்பதே நல்லது.

பீட்ரூட் ஜூஸ் குடித்தால் அனைவருக்குமே காய்ச்சல் வராது. ஆனால் சில ரிப்போர்ட்டுகளில் சிலருக்கு காய்ச்சல் வந்திருப்பது தெரிய வந்துள்ளது. உடலினுள் நடக்கும் நச்சுக்களை வெளியேற்றும் செயல்முறையினால், சிலருக்கு லேசான காய்ச்சல் வரும். அதே சமயம் ஒருவருக்கு காய்ச்சல் வருவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆகவே காய்ச்சல் வந்ததற்கு சரியான காரணம் தெரியாமல் பீட்ரூட் ஜூஸ் குடித்தால் தான் வந்தது என்று முடிவெடுக்காதீர்கள்.

அளவுக்கு அதிகமாக பீட்ரூட் ஜூஸை குடிப்பதால் சந்திக்கும் பக்க விளைவுகளுள் ஒன்று அரிப்பு. ஆனால் காய்ச்சலைப் போன்றே, அரிப்பு ஏற்படுவதற்கும் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆகவே உங்களுக்கு அரிப்பு ஏற்படுவதற்கு பீட்ரூட் ஜூஸ் குடித்தது தான் காரணமா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

பீட்ரூட் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும் என்பது தெரியுமா? இது ஒரு நல்ல விஷயம் தான். ஆனால் இதை ஏன் பக்க விளைவுகளின் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது தான் கேட்கிறீர்கள். ஏனெனில் பீட்ரூட் ஜூஸ் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. ஆனால் குறைவான இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது ஆபத்தானது. அதேப் போல் உயர் இரத்த அழுத்தத்திற்கு மருந்து மாத்திரைகளை எடுப்பவராயின், பீட்ரூட் ஜூஸைக் குடிக்காதீர்கள்.

ஆகவே பீட்ரூட்டின் நன்மை தீமைகளை நன்கு புரிந்து அறிந்து நாம் அளவோடு எடுத்துக் கொண்டு ஆரோக்கியத்தை காப்போம்..!

 நோய் வருமுன் காப்போம்..!

 நல்ல (உணவு) மருந்து…! நம்ம நாட்டு (உணவு) மருந்து…!

 தொகுப்பு:- சங்கரமூர்த்தி… 7373141119