உடல் நலம் காப்போம்
தொடர்ந்து நீண்டநாள் மதுவைப் பருகிவருவதால் இளைஞர்களுக்கு ஏற்படும் பக்க விளைவுகள் எவை?
நீண்ட நாள் மது அருந்தி வருவதால் கல்லீரல் இழைநார், புற்றுநோய்கள் [(குறிப்பாக வாய், தொண்டை, குரல் வளை, இரைப்பை, குடல் (ஆண்கள்) மார்பகம் (பெண்கள்)] உண்டாகின்றன.
மாரடைப்பு, இரத்த அழுத்தம் உட்பட பல இதய, இரத்தம் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன.
மதுவை சார்ந்திருத்தல்
கர்ப்ப காலத்திலும் பாலூட்டும் சமயத்திலும் மது எடுப்பதால் குழந்தை பாதிக்கப்படுகிறது.
தோல் பிரச்சினைகள்
பாலியல் பலவீனம், கருவுறுதல் ஆகிய இனப்பெருக்க செயல்பாடுகளில் பிரச்சினைகள்.
மன ஒருமைப்பாடு, ஞாபகப் பிரச்சினைகள்
மனஅழுத்தம்
மதுவினால் இளைஞர்களுக்கு ஏற்படும் குறுகிய கால பக்க விளைவுகள் எவை?
ஒருங்கிணைப்பு இன்மை மற்றும் மந்த செயல்பாடு
மன ஒருமை குறைவு
குமட்டலும் வாந்தியும்
உடல் சிவந்து தோன்றுதல்
கண் மயங்கலும் பேச்சு குழறலும்
கடுமையான மனநிலை: உ-ம்: முரட்டுத்தனம், வெறி, மனவழுத்தம்
தலைவலி
மன இருள்
மேலும் உடல் பிரச்சினைகளும் உருவாகும். குடிகாரர்கள் தொல்லைதரும் மனம் இருளாதல் என்னும் நினைவாற்றல் இழப்பால் பாதிக்கப்படுவார்கள். கல்லீரலில் எரிச்சலும் உணவுமண்டலத்தில் அழற்சியும் ஏற்படுவதால் குடிகாரர்களால் குறைவாகவே உண்ண முடியும். இதனால் நெஞ்செரிச்சலும் குமட்டலும் உண்டாகும்.
எச்சரிக்கும் அடையாளங்கள் பேச்சுக்குழறலும் மதுநெடியும் ஆகும்.
முன்கோபம், எரிச்சல், அமைதியிழத்தல் ஆகியவை குடிகாரர்கள் குடிக்காவிடில் ஏற்படும் நோயறிகுறிகளாகும்.
தொகுப்பு – மருது