5ம் இடம் செய்யும் அற்புதம்

ஜோதிடர்கள் ஒரு குழந்தைக்கு முதன்முதலில் ஜாதகம் கணித்து எழுதுகிற போது

‘ஜனனீ ஜென்ம சௌபாக்யானாம் வர்த்தனி குல சம்பிரதாம் பதவீ பூர்வ புண்ணியானாம் லிக்யதே ஜென்ம பத்ரிகா.!’

அதாவது, தாய் மற்றும் குழந்தை நலனிற்காகவும், குடும்பத்தின் சந்தோஷ வளர்ச்சிக்காகவும், பழங்கால பழக்க வழக்கங்களை நடைமுறை படுத்துவதற்காகவும், பூர்வ பண்ணியபடி வாழக்கையை நடத்திவர, இந்த பிறப்பு குறிப்பு எழுதப்பட்டுள்ளது என்பது அதன் அர்த்தமாகும். 

பதவி என்பது ஒரு குழந்தை ஆணோ, பெண்ணோ அதன் வளர்ச்சி ஒவ்வொரு நிலையாக அடுத்தடுத்த கட்டத்தைத் தாண்டி செல்வதையே குறிப்பதாகும். அதாவது ஒரு குழந்தை படித்து முடித்து வேலைக்குச் சென்று திருமணமாகி அப்பா / அம்மாவாகி, தாத்தா / பாட்டி ஆகி இப்படி ஒவ்வொரு நிலையிலும் பதவி உயர்வு பெறுவதையே அது குறிக்கும். 

ஒருவனுக்கு நல்ல மனைவி, நல்ல மகன், நல்ல மகள், நல்ல மருமகன், நல்ல மருமகள், நல்ல சொத்து, நல்ல சுகம் கிடைத்தால் அவர்களைப் பார்த்து அடுத்தவர் கூறுவது, “அவர் புண்ணியம் செய்தவர் பா” என்பதுதான். 

எவர் ஒருவர் முன் ஜென்மத்தில் புண்ணியங்களைச் செய்தாரோ அவர்களின் இந்த பிறவியின் ஜாதகத்தில் நிச்சயமாக
5-ம் இடம் மிகப் பிரமாதமாக அமைந்து இருக்கும். லக்கினத்திற்கு, 5-ம் இடத்து அதிபதி, 6,8,12-ல் அமரக் கூடாது; நீச்சம் பெறக்கூடாது; ராகு, கேது உடன் சேரக் கூடாது. அந்த 5-க்குரிய கிரகம், 2, 9, 4, 11-க்கு உரிய கிரகத்துடன் இணைந்து அமைந்திருந்தால், ஏ.டி.எம். மிஷனே அவன் வீட்டில் இருப்பது போலதான். பணத்திற்கு பஞ்சமே இருக்காது. இந்த ஜாதகரிடம், எப்போதும் பணம் புழக்கம்தான்.

5ம் இடம் அற்புதங்களைச் செய்யும் இடம்.

5-ம் இடத்தில் யோக கிரகங்கள் அதாவது 5-க்குரிய கிரகம், 2-க்குரிய கிரகம், 9-க்குரிய கிரகம், 10-க்குரிய கிரகம், 11-க்குரிய கிரகம் இப்படி ஏதேனும் ஒரு அமைப்பு இருந்தால், வாழ்க்கையில் பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டாலும், இந்த 5-ம் இடத்தின் அற்புத அமைப்பு அந்த நபரை மீண்டும் உச்சநிலைக்குத் தூக்கி வந்துவிடும். பெருமைக்குரிய வாழ்க்கை தரும். ஏதேனும் காரணத்தால் பணமும், புகழும் சட சடவென சரிந்தாலும் மீண்டும் அந்த ஜாதகரை மேலே எழுப்பி சிகரத்தில் உட்கார வைக்கும் அற்புதமிக்க இடமே 5-ம் இடமும், 5-ம் இடத்தின் கிரகமும் செய்கிற சிறப்பு ஆகும்.

ஜோதிட ஆய்வில்
astro செல்வராஜ்
Cell : 9842457912
வே. இராஜவர்மன் டில்லி தலைமை ஆசிரியர்