சிம்புக்கு கார் பரிசளித்த தாய் உஷா ராஜேந்தர்!

சிம்புக்கு கார் பரிசளித்த தாய் உஷா ராஜேந்தர்!

திரைப்படங்களில் பழைய உற்சாகத்துடன் மீண்டும் நடிக்க ஆரம்பித்து, உடல் எடையைக் குறைத்துள்ள சிம்புவின் முயற்சிகளுக்குப் பாராட்டு தெரிவிக்கும் விதமாக அவருக்கு கார் ஒன்றைப் பரிசளித்துள்ளார் உஷா டி. ராஜேந்தர்.

சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்கிற படத்தில் நடித்துள்ளார் சிம்பு. இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. ஒரு மாதத்துக்குள் ஈஸ்வரன் படப்பிடிப்பை முடித்துக்கொண்ட சிம்பு அடுத்ததாக மாநாடு படத்தின் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டுள்ளார். மேலும் ஊரடங்குக் காலத்தில் தன்னுடைய உடல் எடையைக் குறைத்து புதிய தோற்றத்துடன் உள்ளார்.

இதையடுத்து சிம்புவின் முயற்சிகளுக்குப் பாராட்டு தெரிவிக்கும் விதமாக அவருடைய தாய் உஷா டி. ராஜேந்தர், சிம்புவுக்கு மினி கூப்பர் காரைப் பரிசளித்துள்ளார். மாநாடு படப்பிடிப்பு நடைபெறும் புதுச்சேரியில் இந்த காரைத் தற்போது பயன்படுத்தி வருகிறார் சிம்பு.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.