துஷ்கிரிதி யோகம்
களத்திர ஸ்தானாதிபதி
(ஏழாம் வீட்டின் அதிபதி)
6 அல்லது 8 அல்லது 12ஆம் வீட்டில் இருக்கும் அமைப்பிற்கு துஷ்கிரிதி யோகம் என்று பெயர்.
இந்த யோகம் மோசமான யோகம்.
அவ யோகம். இந்த யோகம் இல்லாமல் இருப்பது நல்லது.
பலன்:
ஜாதகனின் நடத்தையால், ஜாதகனின் மனைவிக்கு, ஜாதகனிடம் சுமூகமான, அன்பான உறவு இருக்காது. அதைப் பற்றிக் கவலைப்படாமல் ஜாதகன் பிறன் மனைகளின் மேல் கண்ணாக இருப்பான். அதாவது சட்டத்திற்குப் புறம்பான பெண் உறவுகளுக்காக அலைந்து திரிந்து கொண்டிருப்பான்.
ஊர் சுற்றியாக இருப்பான். அவனுக்குப் பால்வினை நோய்கள் இருக்கும். உறவினர்களால் வெறுக்கப்பட்டவனாக இருப்பான். எப்போதும் மகிழ்ச்சியற்றவனாக இருப்பான்.
ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களோடு இந்த அமைப்பால், சிலர் அரச தண்டனைக்கும் ஆளாக நேரிடும்.
ஜாதகத்தின் வேறு சுப கிரகங்களின் அமைப்பால் இந்த அவ யோகம் இல்லாமலும் போய்விடும்.
ஜோதிட ஆய்வில்
Astro செல்வராஜ்
Cell : 9842457912
வே. இராஜவர்மன் டில்லி தலைமை ஆசிரியர்