தொகுதி ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

சென்னை,

தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்களும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு தலா 6 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. நேற்று மாலை ம.தி.மு.க.வுடன் தி.மு.க. தொகுதி பங்கீடு உடன்பாடு கண்டது. ம.தி.மு.க.வுக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டன.

 இந்த நிலையில்  இன்று காலை திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க ஸ்டாலின்- கேஎஸ் அழகிரி  முன்னிலையில் தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தானது. 

செய்தி ரசூல்

தமிழ்மலர் மின்னிதழ்