வர்கோத்தம யோகம்

ராசி மற்றும் நவாம்சத்தில் ஒரே இடத்தில் லக்கினம் இருந்தால் அது வர்கோத்தம லக்கினம் எனப்படும்.

ராசி கட்டத்தில் சிம்மத்தில் செவ்வாய் இருந்து அம்சத்திலும் சிம்மத்தில் செவ்வாய் இருந்தால் அதற்கு வர்கோத்தம செவ்வாய் என்று பெயர்

சிம்மத்திற்கு செவ்வாய் யோககாரகன். அவன் வர்கோத்தமும் பெற்றால் ஜாதகனுக்கு இரட்டிப்பு யோகங்களைக் கொடுப்பார். நல்ல பலன்களைக் கொடுப்பார்.

அப்படி வர்கோத்தமம் பெறும் கிரகம் வலிமை உடையதாக ஆகிவிடும். அந்த அமைப்பு ஜாதகனுக்கு அதிகமான அளவு நன்மையான பலனைக் கொடுக்கும்.

இயற்கையில் தீய கிரகமாக இருந்தாலும், வர்கோத்தமம் பெறும்போது நன்மைகளைக் கொடுக்கும்.

லக்கினம் வர்கோத்தமம் பெற்றால் ஜாதகன் நீண்ட ஆயுளுடன் இருப்பான்.

சூரியன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்குத் தலைமை ஏற்கும் தகுதியைக் கொடுக்கும்.

சந்திரன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத மன வலிமையைக் கொடுக்கும். எதையும் சட்டென்று புரிந்து கொள்ளும் தன்மையைக் கொடுக்கும்.

செவ்வாய் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத ஆற்றலை, செயல் திறனைக் கொடுக்கும்.

புதன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத பேச்சுத் திறமையைக் கொடுக்கும்.

குரு வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத புத்திசாலித்தனத்தைக் கொடுக்கும்.

சுக்கிரன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அழகையும், கவரும் தன்மையையும் கொடுக்கும்.

சனி வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீதப் பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் கொடுக்கும்.

ராகு வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீதத் துணிச்சலைக் கொடுக்கும்

கேது வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத ஞானத்தைக் கொடுக்கும்

இது தவிர, வர்கோத்தமம் பெறும் கிரகம், ஜாதகத்தில் அது எந்த பாவத்திற்கு/வீட்டிற்கு உரியதோ, அந்த வீட்டிற்கான பலன்களை உரிய நேரத்தில் வாரி வழங்கும்.

இவை எல்லாமே பொதுப்பலன்கள்.

தனிப்பட்ட ஜாதகங்களுக்கு இந்தப் பலன்கள், மற்ற கிரகங்களின் பார்வை, சேர்க்கை, வக்கிர நிலைமை, அஸ்தமனம், போன்ற இதர விஷயங்களை வைத்துக் கூடலாம் அல்லது குறையலாம் அல்லது இல்லாமலும் போகலாம்.

ஏழாம் வீட்டு அதிபதி, ராசி மற்றும் நவாம்சம் இரண்டிலும் ஒரே இடத்தில் வர்கோத்தமம் பெற்றிருந்தால், ஜாதகனுக்கு, நல்ல மனைவி கிடைப்பாள். ஜாதகியாக இருந்தால் நல்ல கணவன் கிடைப்பான்.

ஜோதிட ஆய்வில்
Astro Selvaraj Trichy
Cell : 9842457912
வே. இராஜவர்மன் டில்லி தலைமை ஆசிரியர்