உலகத் திருக்குறள் மையம்
உலகத் திருக்குறள் படைப்பு மையம் நடத்தும்
உலகளாவிய திருக்குறள் படைப்பிலக்கிய மாநாடு
01-03-2021
?முதன்மை அறிவிப்புகள்
? 1. மாநாட்டில் பங்கேற்போர்,
அந்தந்த அரங்கில் அகர நிரலில் அழைக்கப்படுவர். உடனே அரங்கில் தோன்றித் தம் படைப்பை வழங்க வேண்டுகிறோம்.
மறு வாய்ப்புக்கு இடம்
இருக்காது.
? 2. தம் படைப்பை வழங்குவோர் தொடக்கத்தில் ‘வணக்கம்’ என்றும், இறுதியில் ‘நன்றி’ என்றும் மட்டுமே கூறினால் போதும்.
சொல்லையோ தொடரையோ
மீண்டும் திரும்பப் படித்தல் கூடாது.
? 3. ஒருவரே ஒன்றிற்கு மேற்பட்ட படைப்புகளில் தேர்வு பெற்று விருதுகள் பெற்றிருப்பினும், காலம் கருதி, அனைவருக்கும் வாய்ப்பு வழங்கும் நோக்கில், தேர்வு பெற்றவர்களுள் ‘ஒருவருக்கு ஒரு வாய்ப்பு’
என்று வழங்கப்பட்டுள்ளது.
? 4. அந்தந்த அரங்கில், பங்கு பெறுவோர் தவிர்த்து விருது பெறும் பிறரின் பெயர் பட்டியல் வழங்கப்படும்.
? 5. அரங்கில் தோன்றித் தம் படைப்பை வழங்குவோருக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்படும்.
இல்லையெனில், எத்தனை விருதுகளுக்குத் தேர்வு பெற்று இருப்பினும் அனைத்தும் இழக்க நேரிடும்.
? 6. படைப்பாளர்கள் மாநாட்டில் இறுதி வரை பங்கேற்று, இறுதியில் சாட் ( chat ) பகுதியில் வழங்கப்படும் பின்னூட்டப் படிவத்தைத் தத்தம் மின்னஞ்சலோடு உரிய முறையில் கட்டாயம் நிறைவு செய்தல் வேண்டும்.
? 7. காலம் இருப்பின், தேர்வு பெற்றவர்களின் பெயர்களில் விடுபட்டவர்களுக்குத் தத்தம் படைப்பை வழங்க ஒரு வாய்ப்பு
இறுதியில் வழங்கப்படும்.
? 8. தத்தம் படைப்புகளை வழங்குவோர், படைப்புகளை வழங்கி முடித்தவுடன் தத்தம் ஒலிவாங்கியை அருள்கூர்ந்து அணைத்துவிட வேண்டுகின்றோம்.
? இப்படிக்கு,
தங்கள் வரவு உறவு நாடும்,
உலகத் திருக்குறள் படைப்பு மையப் பொறுப்பாளர்கள்