நல்ல மருந்து! நம்ம நாட்டு மருந்து! தொடர் -38
கசப்பு சுவை வரிசையிலுள்ள துளசி இந்தியாவிலுள்ள பல வீடுகளும் இருந்திருக்கும். ஆனால் துளசியின் உண்மையான நன்மை பற்றி பலரும் அறிந்திருப்பதில்லை. துளசியில் பலவகையான மருத்துவ குணங்கள் உள்ளது. துளசி ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய உதவியாக இருக்கிறது. துளசி ஒரு புனிதமான செடி என்று கூறுவார்கள். ஏனென்றால் அது நம் உடலுக்கு அந்த அளவிற்கு நன்மை செய்கிறது. பழங்காலத்தில் துளசி அனைத்து வீடுகளிலும் இருக்கும். துளசிக்ன்று தனியாக ஒரு மாடம் அமைத்து அதை சுற்றி வருவார்கள். துளசியை சுற்றிவந்தால் பலவிதமான நோய்த் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது பலரது நம்பிக்கையாக இருக்கிறது. துளசி உண்மையிலேயே அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த செடி தான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அந்த அளவிற்கு மிகப்பெரிய கிருமிநாசினியாக செயல்படுகிறது.
துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.
வேறு பெயர்கள்:
துழாய், திவ்யா, பிரியா, துளவம், மாலலங்கல், விஷ்ணுபிரியா, பிருந்தா, கிருஷ்ணதுளசி, ஸ்ரீதுளசி, ராமதுளசி
இனங்கள்:
நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்)
துளசி இலை, தண்டு, பூ, வேர் அனைத்துப் பகுதிகளும் மருத்துவ குணம் வாய்ந்தவை..
மூலிகைகளின் ராணியான துளசி, அதன் மருத்துவ குணத்தால், ஆயுர்வேத மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் இதன் இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. மேலும் பெரும்பாலான தென்னிந்திய வீடுகளில் துளசி கட்டாயம் வளர்க்கப்படும் செடிகளுள் ஒன்று. எனவே உங்கள் வீட்டிலும் துளசி செடி இருந்தால், உங்களுக்கு ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வீட்டிலேயே தீர்வு காணலாம்.
காய்ச்சல் இருக்கும் போது, உடனே மாத்திரையை வாங்கிப் போடாமல், துளசி இலையை வாயில் போட்டு மென்று வாருங்கள். இதனால் துளசியானது காய்ச்சலை குறைத்துவிடும்..
தொண்டைப் புண் இருக்கும் போது, துளசியை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரால் வாயை கொப்பளித்தால், தொண்டைப்புண் குணமாகும்.
உடலில் வெப்பம் அதிகம் இருந்தால், தலை வலி வரக்கூடும் என்பது தெரியுமா? ஆம், அப்படி வரும் தலை வலிக்கு துளசி மிகவும் சிறப்பான நிவாரணி. அதற்கு துளசியை அரைத்து, அதில் சந்தனப் பொடி சேர்த்து கலந்து, நெற்றியில் பற்று போட்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைப்பதோடு, உடல் சூடும் குறையும்.
கருப்பு துளசியின் சாறு கண்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரும். அதிலும் கண்களில் புண் இருந்தால், கடுமையான அரிப்பு, எரிச்சல் ஏற்படும். அப்போது துளசியின் சாற்றினை கண்களில் ஊற்றினால், விரைவில் குணமாகும்.
ஈறுகளில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலோ அல்லது வாய் துர்நாற்றம் அடித்தாலோ, அப்போது துளசியை உலர வைத்து, பொடி செய்து, அத்துடன் கடுகு எண்ணெய் ஊற்றி பேஸ்ட் செய்து, ஈறுகளில் தடவி தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்தால், வாய் பிரச்சனைகள் அகலும்.
தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் துளசி இலையை சாப்பிட்டு வந்தால், அவை இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய நோய் வரும் அபாயத்தைக் குறைக்கும்.
இருமல் கடுமையான சளி மற்றும் இருமலால் அவஸ்தைப்பட்டால், துளசி இலையை மென்று அதன் சாற்றினை விழுங்கி வாருங்கள். இதனால் அதில் உள்ள மருத்துவ குணத்தால், சளி, இருமல் பறந்தோடிவிடும்.
நீரிழிவு நோயாளிகள் துளசி இலையை சாப்பிட்டு வந்தால், அதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து, இன்சுலின் சீராக சுரக்கப்பட்டு, நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைக்கும்.
துளசி இலையை சாறு எடுத்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக பாதையில் ஏதேனும் தொற்று இருந்தாலும் குணமாகும்.
மன அழுத்தம் என்பது தற்போது அதிகம் உள்ளது. உங்களுக்கு மன அழுத்தமில்லாத வாழ்க்கை வாழ ஆசை இருந்தால், துளசி இலையை தினமும் சாப்பிட்டு வாருங்கள். இதனால் அதில் உள்ள அடாப்டோஜென் மன அழுத்தத்தைப் குறைக்கும்..
ஆரோக்கிய வாழ்க்கைக்கு அற்புதமான தெய்வீக மூலிகை துளசி என்பதை உணர்ந்து அதை அனுதினமும் பயன்படுத்தி மகிழ்வோமாக…
நல்ல (உணவு) மருந்து…! நம்ம நாட்டு (உணவு) மருந்து…!
தொகுப்பு:- சங்கரமூர்த்தி…. 7373141119