நல்ல மருந்து! நம்ம நாட்டு மருந்து! – தொடர் – 33
அறுசுவைகளில் ஒன்றான கசப்பு சுவையில் முக்கியப் பங்கு வகிக்கும் கொத்தமல்லியின் இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. சாம்பார், ரசம் போன்ற நமது சமையலில் இதன் விதைகள் பயன்படுகின்றன.
கொத்தமல்லி விதையை தனியா என்றும் அழைக்கின்றனர்.
கொத்தமல்லி, மாங்கனீசு, இரும்புச்சத்து, நார்ச்சத்து ஆகியவற்றை கொண்டுள்ளது. வயிற்று வலி, ஹெர்னியா, வயிற்றுப்போக்கு, வாயு, பசியின்மை ஆகியவற்றை மாங்கனீசு போக்க கூடியது. பல் வலி, மூட்டு வலி, கிருமிகள் மற்றும் பூஞ்சைகளால் ஏற்படும் நோய் ஆகியவற்றை குணமாக்க கூடியதாகவும் இது இருக்கிறது. பால் சுரப்பதை அதிகமாக்கும் என்பதால், தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களாலும் இது எடுத்துக்கொள்ளப்படுகிறது. உணவு நச்சில் இருந்தும் இது காக்கும்.
கொத்தமல்லி, தழை, விதை மற்றும் எண்ணெய் என பலவிதங்களில் பயம்படுத்தப்படுகிறது. கொத்தமல்லி பலவித மருதுகளில் பயன்படுத்தப்படுவதோடு, சோப் உள்ளிட்ட அழகு சாதனப்பொருட்களில் நறுமணத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.
கொத்தமல்லியின் மருத்துவ நலன்களை அறிவதற்கு முன், கொத்தமல்லி தொடர்பான முக்கிய விஷயங்களை அறிந்து கொள்வது நல்லது..
கொத்தமல்லி, தீங்கான கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது.
உங்கள் ஜீரண அமைப்புக்கு உகந்தது மற்றும் கல்லீரல் செயல்பாட்டிற்கு உதவக்கூடியது என்பதால், இது பல்வேறு உணவு பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. மலம் வெளியேற்றத்திலும் இது உதவுகிறது.
இது இன்சுலின் சுரப்பை ஊக்குவித்து, இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது.
அல்சைமர் நோய்க்கு சிகிச்சை அளிக்க உதவும் வைட்டமின் கே இதில் உள்ளது.
நுரையீரல் மற்றும் தொண்டை புற்றுநோயில் இருந்து பாதுகாக்கிறது.
பல்வேறு நோய்களில் இருந்து காக்கும், ஆண்டி ஆக்சிடெண்ட்களை அதிகம் கொண்டுள்ளது. மூட்டு வலியில் இருந்து காக்கிறது.
இதன் புண் எதிர்க்கும் தன்மை வாய் புற்றுநோயை குணமாக்கும்.
கண்கள் சார்ந்த பிரச்சினை மற்றும் நோய்களை தடுக்கிறது. காஞன்ச்டிவிடிஸ் நோய்க்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.
மாதவிலக்கு வெளிப்பாட்டை சீராக்க கொத்தமல்லி விதை சிறந்த மருந்தாக அமைகிறது.
இது நினைவுத்திறனை அதிகமாக்கி, நரம்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது.
அனிமீயா பாதிப்பு இருந்தால் உணவில் கொத்தமல்லி சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், அனீமியாவை குணமாக்க தேவையான இரும்புச்சத்தி இதில் அதிகம் உள்ளது.
கொத்தமல்லி இரத்த சர்க்கரை அளவை குறைத்து, ஒரு சில ஒட்டுண்ணிகளையும் அழிக்ககிறது. இந்தியாவில், தனியா என்றும் குறிப்பிடப்படும், கொத்தமல்லி, உலகம் முழுவதும் பலவித உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. இதன் இலைகள்,விதைகள் மற்றும் எண்ணெய் உணவுக்கு நறுமணம் அளிக்கிறது. தினமும் உணவில் கொத்தமல்லி சேர்த்துக்கொள்வதால் கிடைக்க கூடிய மருத்துவப் பலன்கள் இதோ.
இந்த ஆரோக்கியமான இலை, உங்கள் சருமத்தை பூஞ்சை தாக்குதல், உலர்தன்மை மற்றும் அரிப்பில் இருந்து காக்க கூடிய, புண்களுக்கு எதிரான, பூஞ்சைகளுக்கு எதிரான மற்றும் நச்சு நீக்கும், ஆண்டிஆகிசிடெண்ட் தன்மைகளை பெற்றுள்ளது. அதே போல, கொத்தமல்லி விதைகள், கிருமிகளுக்கு எதிரான மற்றும் புண்களுக்கு எதிரான தன்மை கொண்டிருப்பதால் சருமத்தின் மீது பயன்படுத்தலாம். இது உங்கள் சருமத்தை மென்மையாக்கி, பொலிவு பெற வைக்கிறது.
கொத்தமல்லி எண்ணெயில் முக்கியமாக காணப்படும், சிட்ரோநெல்லால், வாய் புண்களை குணமாக்கும் தன்மை கொண்டது. மேலும், கிருமிகளை எதிர்க்க கூடிய ஆற்றல் கொண்ட வேறு சில பொருட்களும் இருப்பதால், காயங்கள் மற்றும் வாய் புண் வேகமாக குணமாக வழி செய்கிறது. கொத்தமல்லியை உட்கொள்வதன் மூலம் வாய் துர்நாற்றம் விலகும். இதற்காக ஒரு சிலர் கொத்தமல்லி விதைகளை வாயில் போட்டு மெல்வது உண்டு.
தங்கள் எலும்புகளின் நலனை காக்க விரும்புகிறவர்களுக்கு ஏற்ற வகையில், கொத்தமல்லி கால்சியம் சத்து அதிகம் கொண்டுள்ளது. எலும்பு வளர்ச்சியில் மற்றும் ஆஸ்டோபோரோசிஸ் தடுப்பில் கால்சியம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் பொருள், தினசரி உணவில் கொஞ்சம் கொத்தமல்லி சேர்த்துக்கொள்வதன் மூலம் உங்கள் எலும்பை வலுவாக்கி கொள்ளலாம் என்பதாகும். ஒவ்வொரு கொத்தமல்லி இழையின் நடுப்பகுதியில் கால்சியம் இருப்பதால், உங்கள் உணவில் தினசரி கொஞ்சம் கொத்தமல்லி சேர்த்துக்கொள்வது உங்கள் எலும்புகளுக்கு மிகவும் நல்லது.
கொத்தமல்லி, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, தாதுக்கள் மற்றும் ஆண்டிஆக்சிடெண்ட் கொண்டிருப்பதால், கண் பார்வையை காப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். இவை உங்கள் மீதான அழுத்தத்தையும் குறைக்கிறது. வயதானவர்களை பாதிக்கும் கண் நோய்களை தடுக்க கூடிய பீட்டா கரோடினினும் இதில் இருக்கிறது.
கொத்தமல்லி, காஞன்சிடிவிடிஸ் நோயை குணமாக்க பயன்படுத்தப்படுகிறது. இதன் கிருமிகளுக்கு எதிரான மற்றும் தொற்றுகளுக்கு எதிரான அமச்ங்கள், கண்களை பாதுக்காக்கின்றன. கொத்தமல்லி எண்ணெய், பல வித கண் சிகிச்சை பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.
கொத்தமல்லியை உட்கொளும் போது, இது உடலின் இன்சுலின் சுரப்பை அதிகமாக்குகிறது. கொத்தமல்லி, எண்டோகிரைன் சுரப்பிகளை ஊக்குவித்து, கணையம் அதிக இன்சுலின் உற்பத்தி செய்ய வைக்கிறது. இது இயற்கையாக இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதால், நீரிழிவு கட்டுப்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கொத்தமல்லி, ஆண்டிஆக்சிடெண்ட், கிருமிகள் மற்றும் நோய்த்தொற்று எதிர்ப்பு தன்மை உடைய முதன்மை எண்ணெய்களை கொண்டிருக்கிறது. நோய் எதிர்ப்பு அமைப்பை வலுவாக்கும், வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்து கொண்டுள்ளது. உங்களுக்கு நோய் எதிர்ப்பு அமைப்பு வலுவாக இருந்தால், உங்கள் உடல் அத்தனை எளியாக நோய்க்கு உள்ளாகாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே கொத்தமல்லி நோய் எதிர்ப்பு அமைப்பை வலுவாக்குவதால், அம்மை நோயை தடுக்கிறது. இருப்பினும், வைட்டமின் சி கொண்ட உணவுகள், அம்மையை குணமாக்க உதவுவதாக கடந்த கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கொத்தமல்லியின் 11 முக்கிய பொருட்களில், முதன்மை எண்ணெய்கள் மற்றும் லினோலிக் அமைகின்றன. இந்த இரண்டும் விளக்கம் ஆண்டிஆக்ஸ்சிடெண்ட் தன்மை கொண்டவை மற்றும் பல்வேறு நோய்கள் மற்றும் தொற்றில் இருந்து உடலை காக்க கூடியது. புண் ஏற்படுவதில் இருந்து காத்து, வீக்கத்தை குறைப்பது இவற்றின் முக்கிய பயனாகும். இவற்றின் புண்ணுக்கு எதிரான தன்மை சரும பொலிவையும் அளிக்கிறது. உங்கள் சருமத்தை பார்க்கும் போது, அதில் எந்த மேம்பாடும் இல்லாதது ஏமாற்றமாக இருக்கலாம். இதை தீர்க்க, கொஞ்சம் கொத்தமல்லி தழையை எழுத்து ஜூஸ் தயாரித்து அருந்தலாம்.
கொத்தமல்லி தழைகள் ஆரோக்கியம் அளிக்க கூடியவை என்றால், கொத்தமல்லி விதைகள் இன்னும் கூடுதல் பலன் அளிப்பவை. பழுப்பு நிறமாக இருக்கும் இந்த விதைகள், அவசிய எண்ணெய்கள் கொண்டிருப்பதால், பல உணவுகளில் நறுமணத்திற்கு சேர்த்துக்கொள்ளப்படுகின்றன. சமையலறையில் இவை முக்கியமாக இடம்பெறுகின்றன. இவை மருத்துவ குணம் கொண்டுள்ளன.
கொத்தமல்லி விதைகள், இஜிமா, உலர் சருமம், அரிப்பு, புண்கள், வாய்ப்புண் உள்ளிட்டவற்றுக்கு சிகிச்சை அளிக்கும்.
கொத்தமல்லி விதைகளில் உள்ள நார்மான்டின் எனும் பொருள் ஜீரணத்தை கட்டுப்படுத்தி அதன் மூலம் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதாக அறியப்படுகிறது. இந்த பொருள் உணவை ஜெரித்து, கொழுப்பை உள்வாங்கி கொள்வதாக ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்த விதைகளில் இருக்கும் வைட்டமின் சி, சக்தி வாய்ந்த ஆண்டிஆக்சிடெண்டாகும். இது நல்ல சருமம் மற்றும் திடமான உடலுக்கு உதவுகிறது. ஜலதோஷம், மற்றும் இருமலையும் குணமாக்குகிறது.
கொத்தமல்லி விதையில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆண்டிஆக்சிடெண்ட் தன்மை கல்லீரலின் சீரான செயல்பாட்டிற்கு உதவி, மலம் கழித்தல் சீராகவும் வழி செய்கிறது. எனவே ஜீரண கோளாறு இருந்தால், உங்கள் உணவில் கொஞ்சம் கொத்தமல்லி விதை சேர்த்துக்கொள்ள மறக்க வேண்டாம்.
கொத்தமல்லி விதைகள் மன அழுத்தத்தை பெருமளவு குறைக்கின்றன. தலைமுடி உதிர முக்கிய காரணம் மன அழுத்தம் தான். கொத்தமல்லி, தலைமுடி வளர்வதற்கும் உதவும்.
கொத்தமல்லி விதைகள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தி, அதைச் சீராக அவைத்திருக்க உதவுகிறது.
மாதவிலக்கு கோளாறு உள்ள பெண்கள் கொத்தமல்லியை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது மாதவிலக்கு கோளாறை சரி செய்யும். இது வலியை குறைத்து, மிகை இரத்தப்போக்கயும் கட்டுப்படுத்தும்.
கொத்தமல்லி தொடர்பான எல்லாமே ஆரோக்கியமானவைதான். கொத்தமல்லி விதைகள், இலைகள் அல்லது எண்ணெய் உணவில் சேர்த்துக்கொண்டால் ஆரோக்கியத்திற்கு உதவும். கொத்தமல்லி விதைகளில் இருந்து எண்ணெய் எடுக்கப்பட்டு, மருத்துவ பொருளாக பயன்படுத்தப்படுகிறது. கொத்தமல்லி எண்ணெயின் மருத்துவப் பலன்கள்.
கொத்தமல்லி எண்ணெய், மிகை வாயுவை அகற்றுவதாக கருதப்படுகிறது. வாயுத்தொல்லை உள்ளவர்கள், வாயு மேல் பக்கம் வருவது மற்றும் கீழ் பக்கம் வெளியேறுவது என இரண்டு விதமாக அவதிப்படுகின்றனர். வாய் மேல் பக்கம் செல்வதை கவனிக்காமல் விட்டால் ஆபத்தாக முடியலாம். இது மரணத்திற்கும் வழிவகுக்கலாம். இதற்கு ஒரு கொத்தமல்லி எண்ணெய் ஒரு ஸ்பூன் எடுத்துக்கொண்டால் போதுமானது.
கொத்தமல்லி எண்ணெய் உடலுக்கான இயற்கையான டியோடரைசராக செயல்படுகிறது. இந்த எண்ணெயை பயன்படுத்தினால், வாயில் துர்நாற்ற பிரச்சினையை சமாளிக்கலாம். மேலும் இந்த எண்ணெய், வியர்வையில் கலந்து மணம் வீசச்செய்கிறது. வாய் துர்நாற்றத்தை போக்க, இதை மவுத்வாஷாகவும் பயன்படுத்தலாம். தண்ணீரில் கலந்து சருமத்தின் மீதும் பயன்படுத்தலாம்.
இந்த ஆரோக்கியமான எண்ணெய், அஜூரணத்தை போக்க கூடிய பல்வேறு ஜூரண குணநலன்களை கொண்டுள்ளது. இதன் மணம் பசியை தூண்டும்.
கொத்தமல்லில் செக்ஸ் வாழ்க்கையை மேம்படுத்துவதாக கருதப்படுவதால், ஆண்கள், பெண்கள் என இரு தரப்பினருக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. வாழ்க்கைத்துணை மீது பாலியல் இச்சை இல்லை எனில், கொஞ்சம் கொத்தமல்லி எடுத்துக்கொண்டால் மாற்றத்தை உணரலாம். இருவரும் கொத்தமல்லி எடுத்துக்கொண்டால், இது வெற்றிகரமாக அமையும்.
கொத்தமல்லி எண்ணெயை மிதமாக பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். இந்த எண்ணெயை அதிகம் பயன்படுத்தினால், கட்டுப்பாட்டை இழக்கலாம். இது உடனடி நிவாரணம் அளிப்பதால், இதை அடிக்கடி பயன்படுத்த தோன்றலாம். எனவே இதை கவனமாக பயன்படுத்த வேண்டும்.
சரும பலன்கள் முதல் பாலியல் இச்சை வரை பலவிதமான பலன்களை கொத்தமல்லி நூற்றாண்டுகளாக வழங்கி வருகிறது. நம்மில் பலரும், இதன் குணநலன் தெரியாமலே உணவுப்பொருட்களில் சேர்த்துக்கொண்டிருக்கிறோம்.
எந்த பொருளுமே பயன்படுத்தப்படும் போது உடல் மீது ஓரளவு பக்கவிளைவை உண்டாக்கும். அதை மிகையாக பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். கொத்தமல்லியை பொருத்தவரை, ஒவ்வாமை மற்றும் சூரிய ஒளி பாதிப்பை உண்டாக்கலாம். சூரிய ஒளி பிரச்சினை இருந்தால், கொத்தமல்லியை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இதனால் எதிர்பாராத பாதிப்புகள் ஏற்படலாம்
கொத்தமல்லி விதைகள், எண்ணெய் அல்லது இலைகளை பயன் படுத்துவது, பல வகை பூஞ்சை பாதிப்புகளை குணமாக்கும். மேலும் பல வகையான சரும் பாதிப்புகள்,ஒவ்வாமையை குணமாக்கும்.
ஆம், நீங்கள் கொத்தமல்லி நீர் அருந்தலாம். இதன் மூலம் உங்கள் சிறுநீரகத்தில் இருந்து நச்சு ரசாயனங்கள் அகற்றப்படுவதை உணரலாம். கொதிக்கும் நீரில் கொஞ்சம் கொத்தமல்லி சேர்த்து, 5 நிமிடம் சுட வைத்து , அதன் பிறகு ஆற வைத்து பயன்படுத்தலாம். ஒரு கிளாஸ் கொத்தமல்லி நீர் நல்ல பலனை அளிக்கும்.
கொத்தமல்லி உங்களுக்கு ஏற்றது எனில், கொத்தமல்லி எண்ணெய் மறும் விதைகள் உங்கள் பலவித பலன்களை அளிக்கும். இந்த ஆரோக்கிய இலையை பயன்படுத்துவது, ஜீரணம், இரத்த சர்க்கரை கட்டுப்பாடு, மேம்பட்ட பார்வை என பலவித நலன்களை தரும். எடை குறைக்க ஆரோக்கிய வழி தேவை என்றாலும், கொத்தமல்லியை பயன்படுத்தலாம். உணவில் கொத்தமல்லியை சேர்த்துக்கொள்வதன் மூலம், நோய்வாய்ப்படுவதை குறைக்கலாம். தினசரி உணவில் கொஞ்சம் கொத்தமல்லி, உங்களை மேலும் ஆரோக்கியமாக்கும்.
நோய் வருமுன் காப்போம்…
நாட்டு (உணவு) மருந்து…!
நம்ம நாட்டு (உணவு) மருந்து
தொகுப்பு:-சங்கரமூர்த்தி…. 7373141119