மேகாலயா உள்பட 4 மாநிலங்கள் பெட்ரோல்- டீசல் வரி.
மேற்குவங்காளம், மேகாலயா உள்பட 4 மாநிலங்கள் பெட்ரோல்-டீசல் வரியை குறைந்து உத்தரவிட்டுள்ளது
புதுடெல்லி:
பெட்ரோல்- டீசலின் அடக்கவிலை குறைவாகவே இருந்த போதிலும் மத்திய அரசும், மாநில அரசுகளும் அதிகளவிலான வரி விகிதத்தை விதித்து இருப்பதால், இவற்றின் விலை மிக அதிகமாக இருக்கிறது.
இந்தநிலையில் சமீப காலமாக எண்ணை நிறுவனங்கள் கச்சா எண்ணை விலை உயர்வை காரணம் காட்டி தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன.
இதனால் தற்போது பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 92 ரூபாயையும், டீசல் விலை 85 ரூபாயையும் தாண்டி விற்று வருகிறது. சில மாநிலங்களில் உள்ளூர் வரி அதிகமாக இருப்பதால் பெட்ரோல் விலை 100 ரூபாயையும் தாண்டி உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்யால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வகையில் சில மாநிலங்கள் தங்கள் மாநில வரியை குறைத்து வருகின்றன. அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில் அதன் மாநிலத்தின் வாட் வரியை 38 சதவீதத்தில் இருந்து 36 சதவீதமாக குறைத்துள்ளது.
அசாம் மாநிலத்தில் கொரோனாவுக்காக கூடுதல் வரி விதிக்கப்பட்டு இருந்தது. அதை அந்த மாநில அரசு அதில் 5 ரூபாயை குறைத்துள்ளது.
மேற்குவங்காள அரசு பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 1 ரூபாய் வரியை குறைத்து இருக்கிறது. மேகாலய மாநிலத்தில் மிக அதிகபட்சமாக வரி குறைப்பு செய்துள்ளனர். அந்த மாநிலத்தில் பெட்ரோலுக்கு விதிக்கப்பட்ட 31.62 சதவீத வரியை 20 சதவீதமாகவும், டீசல் விதிக்கப்பட்ட 22.95 சதவீத வரியை 12 சதவீதமாகவும் குறைத்துள்ளனர். இதனால் அங்கு பெட்ரோல் ரூ.7.40-ம், டீசலுக்கு ரூ.7.10-ம் விலை குறைவு ஏற்பட்டு இருக்கிறது.
இவ்வாறு இதுவரை 4 மாநிலங்கள் தங்கள் மாநில வரியை குறைத்து இருக்கின்றன.
மத்திய அரசு கொரோனா நிதி தேவைக்காக பெட்ரோல், டீசலுக்கு கூடுதல் வரியை ஏற்கனவே விதித்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து மே மாதம் வரை பெட்ரோலுக்கு 13 ரூபாயும், டீசலுக்கு 16 ரூபாயும் உயர்த்தப்பட்டு இருந்தன. ஆனால் அந்த வரியை இதுவரை குறைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி ரஹ்மான்