பண மோசடி

எச்சரிக்கை

சமீப காலமாக பணமோசடி( சைபர் க்ரைம் மாதிரி) கும்பல் ஒன்று வளர்ந்து கொண்டே வருகிறது.

அதாவது அடையாளம் தெரியாத நபர் உங்களது கணக்கில் ஒரு சிறிய தொகை(ரூ.2000/-)யை போட்டு விட்டு தவறுதலாக உங்களது கணக்கில் செலுத்தி விட்டதாகவும் அதனை உடனடியாக தனக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறு உங்களது கைப்பேசியில்அழைப்பார் அதனைக் கேட்டவுடன் உங்கள் மனசாட்சி குற்றவுணர்வு ஏற்பட்டு அந்நபர் கூறியபடி அவர் அனுப்பிய பணத்தை திருப்பி அனுப்ப வேண்டாம்.

ஏனெனில் அவர் இதேபோல பலநபர்களுக்கு அடிக்கடி தவறாக அனுப்பி விட்டதாகவும் தயவுசெய்து அதனை தனக்கு திருப்பி அனுப்பி வைக்கும்படி கூறுவார்.

அவ்வாறு நீங்கள் மனசாட்சிப்படி அடுத்தவர் பணம் என திருப்பி அனுப்ப நினைக்கும் போது அந்த மோசடி நபர் உங்களது Pin எண்ணை திருடி சிலநொடிகளில்உங்கள் MobileBank Accountல் உள்ள முழுவதையும் எடுத்துவிடுவார்.

அதற்கு பதிலாக நீங்கள் அந்த நபரிடம் நீங்கள் தவறாக எனக்கு அனுப்பிய பணத்தை உங்களிடம் நேரில் கொடுத்துவிடுவதாகவும் கூறி மற்றும் அவரதுகைபேசி சட்ட பூர்வமான நிறுவனத்தைச் சார்ந்த தா?என அறிந்து அவரை அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு வரச்செய்து உங்களது பாதுகாப்புகாக அவர்கள் முன்னிலையில் திருப்பி கொடுத்தால் அவர்களது மோசடித்தனம் வெளிப்படும். – பொது நலன் கருதி தமிழ்நாடு காவல் துறை

தகவல் – சையது அலி