பிரதமர் மோடி இன்று சுற்றுப்பயணம்

புதுடெல்லி,

சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் அசாம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் பிரதமர் மோடி இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அசாம் மாநிலம் தேமாஜியில் இயற்கை எரிவாயு திட்டங்களை பிரதமர் இன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். அதனை தொடர்ந்து சிலாபதாரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். 

அதன்பின்னர் மேற்கு வங்கம் செல்லும் பிரதமர் மோடி, ஹுக்ளியில் பல்வேறு ரெயில்வே திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.

செய்தி ரசூல்

தமிழ்மலர் மின்னிதழ்