ஆசியாவின் கால்நடைப் பூங்கா – முதல்வர் இன்று திறப்பு.

சேலம் மாவட்டம் தலைவாசலில் உருவான ஆசியாவின் மிகப்பெரிய கால்நடைப் பூங்காவை முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்.

இந்நிலையில் சேலம் அருகே தலைவாசலில் கட்டப்பட்டுள்ள கால்நடை பூங்காவை முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்.ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா மற்றும் கல்லூரி ரூ.1022 கோடியில் கட்டப்பட்டுள்ளது.1100 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள கால்நடை பூங்காவை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் பழனிசாமி.கால்நடை பண்ணை பிரிவு, கால்நடை உற்பத்தி பொருட்கள் பதப்படுத்துதல் பிரிவு, மீன்வள பிரிவுகள் இதில் அமைக்கப்பட்டுள்ளது.

பூங்கா வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கால்நடை மருத்துவ கல்லூரி ஐந்தாவது கால்நடை மருத்துவ கல்லூரி ஆகும்.

முன்னதாக சேலம் தலைவாசலில் கட்டப்பட்டுள்ள கால்நடை பூங்கா பிப்ரவரி 22 ஆம் தேதி திறக்கப்படுகிறது என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
110 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு உள்ள கால்நடை பூங்கா திறப்பு விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் எடப்பாடி K.பழனிசாமி வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.