கலைமாமணி விருது பெற்றவர்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து!

தமிழக அரசின் கலைமாமணி விருது என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் விருது பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வந்தது என்பது தெரிந்ததே
அந்தவகையில் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கலைமாமணி விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு சார்பில் பழம்பெரும் நடிகைகள் சரோஜாதேவி, சவுகார்ஜானகி உள்பட 201 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது. விருது பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்

குறிப்பாக என்னிடம் 30 ஆண்டுகளாக உடை அலங்கார கலைஞராக பணிபுரிந்த ராஜேந்திரன் மற்றும் பிஆர்ஓ சிங்காரவேலுவிற்கும் கலைமாமணி விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று
தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

‌S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்