தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ராகுல்காந்தி உருக்கமாக பேசியுள்ளார்.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் தேர்தல் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி பாரதிதாசன் கல்லூரி மாணவர்களிடையே ராகுல்காந்தி கலந்துரையாடினார்.

அப்போது, “என் தந்தையை இழந்தது மிகுந்த வலியை ஏற்படுத்தியது.

இருப்பினும் எனது தந்தையைக் கொன்றவர்கள் மீது எந்த கோபமும் இல்லை. நான் அவர்களை மன்னித்து விட்டேன்”என்று ராகுல் உருக்கமாக பேசியது தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பேச்சு மூலம் ராகுல் காந்தி 7 பேர் விடுதலையை ஆதரித்து விட்டார். இனியும் காலம் தாழ்த்தாமல் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

‌S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்