கேரளாவில் பெட்ரோ கெமிக்கல் திட்டம் மற்றும் சர்வதேச கப்பல் முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.

கேரளத்தில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் புரோப்லின் டெரிவேடிவ் பெட்ரோ கெமிக்கல் திட்டம் மற்றும் சர்வதேச கப்பல் முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.

சென்னையில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடக்கி வைத்து கொச்சி சென்ற பிரதமர் அங்கு பல்வேறு நலத்திட்டங்களைத் தொடக்கி வைத்தார்.

பிரோப்லின் டெரிவேடிவ் பெட்ரோகெமிக்கல் திட்டத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார். பெட்ரோகெமிக்கல் வளாகத்தில் அக்ரிலேட், அக்லிக் அமிலம், ஆக்சோ ஆல்கஹால் ஆகியவை தயாரிக்கப்படும்.

இந்தத் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.3,700 கோடி முதல் ரூ. 4,000 கோடி வரை அந்நியச் செலாவணி மிச்சமாகும்.

ரூ.6,000 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்த வளாகம் சுத்திகரிப்பு ஆலைக்கு அருகே அமைக்கப்பட்டுள்ளது.

கொச்சி துறைமுகத்தில் சாகரிகா சர்வதேச கப்பல் முனையத்தையும் பிரதமர் தொடக்கி வைத்தார்.

எர்ணாகுளத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த முனையம் இந்தியாவின் முதலாவது முழு சர்வதேச கப்பல் முனையமாகும்.

நவீன வசதிகளை உள்ளடக்கிய இந்த சகாரிகா சர்வதேச கப்பல் முனையம் ரூ.25.72 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

‌S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்