மிதுன லக்கினத்தின் சிறப்பு
மிதுனலக்கனத்திற்கு 6, 11ம் இடத்து அதிபதியாக செவ்வாய் வருவதால் அரசியலில் இடம் கிடைத்து விட்டால் இவர்களை மடக்க முடியாது.
1, 4ம் இடத்து அதிபதியாக புதன் வருவதால் அதிகமான உழைப்பின்றி வெற்றியினை அடைவார்கள்.
மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இரண்டு யோகர்கள். அவர்கள் சுக்கிரன் சனி.
முதல் யோகர் சுக்கிரன். மிதுன லக்னத்தின் 5 க்குரியவராகவும் 12 க்குரியவராகவும் வருகிறார்.
சுக்கிரன் 5ம் இடத்தின் மூலம் அதிக நன்மைகளை செய்து விடுவார்.
ஆனால் சுக்கிரன் 12ம் வீட்டு ஆதிபத்யமும் பெறுவதால் இவர்கள் ஈட்டும் பொருள் புகழ் மற்றவர்கள் அனுபவிக்க நேரிடும்.
அடுத்த யோகர் சனி
சனி மிதுன லக்னத்தின் 8ம் அதிபதியாகவும் 9ம் அதிபதியாகவும் வருகிறார்.
மிதுன லக்னத்திற்கு சனி வலுத்த யோகராகி நன்மைகளை அள்ளித் தருபவராகவே இருக்கிறார்.
சனி வலுத்து விட்டால் இவர்களை யாராலும் வெற்றி கொள்ள முடியாது.
சனி யோகராக இருந்தாலும் அட்டாமாதிபத்யம் இருப்பதால் மறைவிட அதிபதி மறைவிட கிரகமான ராகு மூலம் பலன்களை தந்து விடுவார்.
மிதுனத்தில் பிறந்தவர்கள் புத்தி சாதுர்யத்தில், படிப்பாற்றல், எழுத்தாற்றல் ஆராய்ச்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள் என பரிமளித்திருக்கிறார்கள்.
இன்னும் சிலர் ஆன்மீகத்தில், சினிமாவில் இசை, விளையாட்டு துறையில் புகழ் பெற்றிருக்கிறார்கள்.
மிதுன லக்னத்தில் பிறந்து அரசியலில் யோகத்தினை பெற்ற சிலரின்
ஜாதகத்தினை ஆய்விடும்போது கிடைக்கப் பெற்ற அரிய தகவல்களை பார்ப்போம்.
மிதுனம் லக்னத்தில் பிறந்து அரசியலில் புகழ் பெற்றவர்கள் :
மொரார்ஜி தேசாய்
ஜெயலலிதா
பிரமோத் மகாஜன்
பிரதிபா பட்டீல்
விஜயராஜே சிந்தியா
அசோக் கெலாட்
மாதவ்சிங் சோலங்கி
அர்ஜின் சிங்
பல்ராம் ஜாக்கர்
ஹேமாவதி நந்தன் பகுகுணா
கேசரிநாத் திரிபாதி
ஹேமந்த குமார் பாசு
ஆனந்த் குமார்
ஜாகீர் உசேன்
பிசி அலெக்சாண்டர்
முரசொலிமாறன்
ஜோதிட ஆய்வில்
Astro Selvaraj Trichy
Cell : 9842457912
வே. இராஜவர்மன் டில்லி தலைமை ஆசிரியர்