சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து!
சென்னை பெருநகர மாநகராட்சி மண்டலம்
5- க்கு உட்பட்ட அண்ணா சாலை, பூக்கடை எழும்பூர், பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் மிகவும் சிரமமாக உள்ளதால் சில சமயங்களில் விபத்துக்களும் ஏற்பட்டு சிறுசிறு காயங்களும் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுகிறது.
அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மண்டலம் 5 க்கு உட்பட்ட மாநகராட்சி அலுவலகத்தில் பல முறை புகார் அளித்தும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இதனை கவனத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்மலர் மின்னிதழ்
தலைமை செய்தி ஆசிரியர்
S.முஹம்மதுரவூப்