சாதி சான்றிதழ்
கலப்பு திருமணம் செய்த பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைக்கு தந்தையின் சாதி அல்லது தாயின் சாதி, இதில் இருவருக்கும் எதில் விருப்பமோ அதன் அடிப்படையில் குழந்தைக்கு சாதி சான்றிதழை வழங்க வேண்டும் என்று அனைத்து வருவாய் துறை அதிகாரிகளும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது .
தமிழகத்தில் வழக்கமாக தந்தை சாதியின் அடிப்படையிலேயே சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வந்த நிலையில், கலப்பு திருமணத்தை அடிப்படையாக வைத்து தற்போது பெரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பாலமுருகன் தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ்மலர் மின்னிதழ்