என் வாழ்வாய் அமைவாள்

அன்று அவள் முகம் பார்த்தேன்.
ஆராமத்தில் பூத்துக் குழுங்கும் மலர்கள்
மெல்ல வாய் விரித்து சிரிப்பதுபோல்
அவள் இதழ் மெல்ல விரிந்தது.
பணிலம்போல் செதுக்கிய மெல்லிய கழுத்தும்
மறுகுபோல் வளைந்து செல்லும் இடுப்பும்
அவள் ஆய்க்கு பாத்திரமாய் விளங்கும்.
விழிகள் கொஞ்சும் எலுவை அவள்.
காலைக் குயிலின் ஓதை அவள்.
துனி அறியா மழலை அவள்.
மணம் தரும் மல்லிகை அவள்.
பிரம்மன் வரைந்த அழகிய வட்டிகையாய்,
கம்பன் வரைந்த தமிழ் காவியமாய்,
மனதில் ஞஞ்ஞை தரும் சொர்ப்பணமாய்,
என் மனதில் நிலைக்கிறாள் அற்புதமாய்.
அன்று விழிகளுக்கு உயிர் கொடுத்தவளை
மீண்டும் தரிசிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
என் கடும்பு கறுப்பாய் ஆனது.
நெஞ்சம் முழுதும் ஆஞ்சி கொண்டது.
ஆணம் கொண்டவளை பாராத கண்கள்
வானம் இழந்த முழு நிலவுபோல்
துனி கொண்டு தினமும் தேய்கிறது.
காத்திருக்கிறேன் மீண்டும் அவள் வருவாளென,
எதிர்பார்த்திருக்கிறேன் என் வாழ்வாய் அமைவாளென.

மறுகு – வீதி;

பணிலம் – சங்கு

ஆணம் – நேயம், நேசம், வாஞ்சை;

துனி – வருத்தம், ஊடல்;

ஆராமம் – பூங்கா, பூந்தோட்டம்;

எலுவை – தோழி;

ஓதை – முழக்கம், ஒலி, ஓசை;

கடும்பு – சும்மாடு, சுற்றம்;

வட்டிகை – தூரிகை, சித்திரம்;

ஆஞ்சி – அஞ்சு, அச்சம்;

ஆய் – அழகு, நுண்மை, சிறுமை;

ஞஞ்ஞை – மயக்கம்.

சித்திரவேல் சுந்தரேஸ்வரன்
இலங்கை

செய்தி விக்னேஸ்வரன்