பிப்ரவரி 15ஆம் தேதி முதல் மாணவர்கள் மின்சார ரயிலில் பயணிக்கலாம்- ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இதையடுத்து தற்போது 9, 11, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் சென்னை மின்சார ரயில்களில் நினைத்த நேரங்களில் மாணவர்கள் பயணிக்க அனுமதி அளித்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் மாணவர்கள் பயணிக்க அனுமதிக்கப்பட்டுவந்த நிலையில் தற்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டதால் அனைத்து நேரங்களிலும் மாணவர்கள் மின்சார ரயில்களில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்