மக்கள் தங்கள் குறைகளை இந்த நம்பர் மூலமாக உடனுக்குடன் தெரிவிக்கலாம் – முதல்வர் அறிவிப்பு.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களை ஈர்க்கும் வண்ணம் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி திருப்பூர் மாவட்டம் அவினாசி லிங்கம்பாளையத்தில் பரப்புரை மேற்கொண்ட போது, திமுக குடும்ப அரசியல் கட்சி நடத்தி வருகிறது. நான் ஒரு விவசாயி.

எனவே அவர்களுடைய சிரமத்தை உணர்ந்து விவசாயிகளின் பயிர்கடன்களை ரத்து செய்தேன்.

மேலும் வீடு இல்லாதவர்களுக்கு வீடுகள் இல்லாத நிலை உருவாக்கப்படும். நான் மீண்டும் முதலமைச்சராகி அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைப்பேன். மேலும் இன்னும் 10 நாட்களில் 1,100 என்ற எண்ணுக்கு அழைத்து குறைகளை தெரிவிக்கும் திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. இதன்மூலம் பொதுமக்கள் தங்கள் குறைகளை உடனுக்குடன் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளார்.

‌S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்