மக்கள் நீதி மய்யம் முதலாவது பொதுக்குழுக் கூட்டம்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதலாவது பொதுக்குழுக் கூட்டம்
இன்று காலை 10 மணி அளவில் சென்னையை அடுத்த வானகரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதலாவது பொதுக்குழுக் கூட்டம் அதன் தலைவர் திரு கமலஹாசன் அவர்களின் முன்னிலையில் நடைபெற்று கொண்டிருக்கிறது.
இதில் அக்கட்சியை சேர்ந்த பொது செயலாளர்கள் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர்கள் மாவட்ட துணை செயலாளர்கள் இணை செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாலமுருகன் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.