நல்ல மருந்து! நாட்டு மருந்து! – தொடர் – 21
நல்ல மருந்து, நம்ம நாட்டு மருந்து எனும் நமது முந்தைய பதிவுகளில் அஞ்சறைப் பெட்டியின் ஐந்து அரிய ரகசியங்களை தெரிந்து கொண்டோம்.
ஐந்து அதிசய மூலிகை தானியப் பொருட்களின் அடிப்படை நோக்கமே ஜீரண சக்தியை பெருக்குவது.
நாம் உண்ட உணவு செரித்து விட்டது என்றால் நமக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்பது சித்தா, ஆயுர்வேத மருத்துவர்களும், ஆங்கில மருத்துவமான அலோபதி மருத்துவர்களும் அழுத்தம் திருத்தமாக கூறி வருகிறார்கள்.
ஒரு மனிதனுக்கு மலச்சிக்கல் என்றுவந்து விட்டாலே கூடவே மனச்சிக்களும் வந்துவிடும் என்று சித்த மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
நாம் உண்ணும் உணவு நமது உடல் வளர்ச்சியில் மட்டும் பங்கெடுக்கவில்லை கூடவே நமது மன வளர்ச்சியிலும் பங்கு எடுக்கிறது என்பதுதான் அதன் அர்த்தம்..!
அதே போல் நாம் உண்ணும் உணவில் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு சுவை அதிகரிக்கவோ குறையவோ செய்யும் போது சகல நோய்களும் அழைக்காத விருந்தாளியாக நம்மை சுற்றிவளைத்து பிடிக்கிறது.
அதே நேரத்தில் உணவு எதுவும் உண்ணாமல் இருந்தால் உடலில் உள்ள சுவைகளே தானாகவே நமது உடல் நிலையை சரி நிலைப்படுத்தி விடுகிறது இதுதான் இயற்கையின் உடல்கூறு நியதி..! எனவே நமக்கு ஏற்படக்கூடிய வியாதிகள் குறையவோ அல்லது நீக்கவோ செய்கின்றன என்பது மருத்துவ உலகம் கண்டறிந்த உண்மையாகும்.
இதனைத்தான் உண்ணா விரதம் அல்லது உண்ணா நோன்பு என்று நமது முன்னோர்கள் குறிப்பிடுவார்கள்.
நமக்குக் இயற்கையாக கிடைக்கப் பெற்ற அறிவாற்றல் கொண்டு அறிவை அறிந்து அளவோடு உணவுகளை உண்டு வந்தால் அதாவது நமது உடல் நிலையை அறிந்து அதற்கேற்ப உணவை நாம் உண்டு வந்தால் கண்டிப்பாக ஆயுள் உள்ளவரை ஆரோக்கியமாக இருக்கலாம்.
எல்லோருக்கும் எல்லா உணவுகளும் ஒத்துப் போகுமா என்றால் அது மிகவும் கஷ்டமான கேள்வி பதில் ஆகும்.
அவர் அதை சாப்பிடுகிறார் இவர் இத சாப்பிடுகிறார் என்பதற்காக நாமும் அவர்கள் இவர்களைப் போல் உணவுகளை உண்டால் கண்டிப்பாக நமக்கு ஒவ்வாமை ஏற்படும்.
இந்த ஒவ்வாமை தான் ஜீரணசக்தியை கெடுத்து விடுகிறது அதைத்தொடர்ந்தான் மலச்சிக்கலும் ஏற்பட்டுவிடுகிறது.
குறிப்பாக எல்லா மனிதர்களுக்கும் ஜீரணசக்தி ஒன்று போல் இருப்பது இல்லை, அது அவர் அவர்களின் உடல் தன்மை கூறுகளை பொறுத்து அமைகிறது.
எனவேதன் பெரும்பாலும் அவர் அவர்களின் உணவு பழக்க வழக்கங்கள் அஜீரணத்திற்கும், மலச்சிக்கலுக்கும் காரணமாகிறது.
குறிப்பாக பாஸ்ட் புட் மசாலா உணவுகளையும், எண்ணெய் பதார்த்த உணவுகளையும் தவிர்த்து பச்சை காய்கறிகளை அதிகம் உண்பவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படுவதில்லை என்று மருத்துவ ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
உப்பு, காரச்சுவை இரண்டும் மலச்சிக்கலை நீக்குகின்றன, அதுபோல் நார்ச்சத்துள்ள உணவுகள் கூட மலச்சிக்கலை நீக்குகின்றன, நார்ச்சத்துள்ள உணவு ஜீரணமாக தாமதமாகும் என்றாலம் மலச்சிக்கலை முறியடிக்கும் தன்மை இதற்கு உண்டு.
மலச்சிக்கலைத் தவிர்ப்பது எப்படி என்பது பற்றி பலரும் நன்கு அறிவர், நாம் புதியதாக ஒன்றும் கூறி விட முடியாது.
இருந்தாலும் தண்ணீர் அதிகமாக பருகுவது சிறப்பு அதாவது குறைந்தபட்சம் நாளொன்றுக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது சிறப்பானது என்பது சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது, அதிகாலையில் எழுந்ததும் சுடு தண்ணீர் குடிப்பது கூடுதல் சிறப்பாகும்.
மேலும் நமது உடலில் ஏற்படும் ஆரோக்கியக் குறைவு, நோய்களைக் கொண்டு ஒருவருக்கு எந்த விதமான சுவை தேவைப்படுகிறது என்று நாம் அனைவரும் தெரிந்து கொள்வது நல்லது.
சுவைகள் ஆறு என்று நாம் அனைவரும் அறிவோம் கசப்பு, உப்பு, துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, காரம் ஆகியவை அருஞ்சவை எனப்படும்.
இவைகள் அளவோடு நம் உடலில் சேரும் போது நாம் ஆரோக்கியமாக வாழலாம் இவற்றில் ஏதேனும் சுவை குறைந்து அதிகரித்தாலும் உடல் ஆரோக்கியம் கெடும், அதைத் தொடர்ந்து மருந்து, மாத்திரை, ஆம்புலன்ஸ், ஆஸ்பத்திரி, மருத்துவர் என்று சம்பாதித்த காசுகளை செலவு செய்வது என்பது மட்டும் உறுதி.
நமது உடல் ஆரோக்கியம் பெரும்பாலும் நமது இரத்தத்தை பொறுத்து அமைகிறது உடலில் ரத்தம் குறைந்தாலும் ரத்தம் அதிகமானாலும் அது ஆரோக்கியத்தை பாதிக்கிறது.
நவீன மருத்துவத்தில் ரத்தத்தை சோதனை செய்து உடலில் உள்ள நோய்களின் தன்மையை அறிகிறார்கள் அலோபதி மருத்துவர்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை..!
ஒருவருக்கு இரத்தம் அதிகமாக இருந்தால் உடல் தினவெடுத்து ஒரு திமிர் தனமான உணர்வு ஏற்படும், அதைத் தொடர்ந்து கை கால் குடைச்சல், வலி, வாத நோய்கள் உண்டாகும் மேலும் கொழுப்பும் உருவாக்கும்,இதைத்தான் கொழுப்பு எடுத்தவன் என்று நாம் அழைக்கின்றோம்.
அதேபோல இரத்தம் குறைவாக இருந்தால் உடல் சோர்வு, நரம்புத் தளர்ச்சி, காமாலை, ரத்தசோகை, உடல் வெளுத்தல், போன்ற நோய்களும் உண்டாகி இளமையிலேயே முதுமையை தொட்டு விடுவோம்.
ரத்தத்தை உற்பத்தி செய்வது துவர்ப்பு சுவையே, அதேபோல் எலும்புகளை பலப்படுத்துகிறது உப்புச் சுவையே, நரம்புகளை பலப்படுத்துவது கசப்புச் சுவை, இனிப்புச்சுவை கொழுப்பை குறைக்கும் புளிப்பு, அதிமுக்கியமான ஜீரணத்தை அதிகரிக்கச் செய்வது காரம்.
பொதுவாக இயற்கையின் இனிய படைப்பில் எல்லா உணவுப் பொருட்களிலும் பழங்கள் உட்பட எல்லா சுவையும் சிறிதளவு கலந்து இருக்கும் இருப்பினும், எந்தெந்த உணவுப் பொருள்களில்அதிகமாக இருக்கிறது என்பதை இனி பார்க்கலாம்.
நோய் வருமுன் காப்போம் நல்ல (உணவு) மருந்து…! நம்ம நாட்டு (உணவு) மருந்து
தொகுப்பு:- சங்கரமூர்த்தி… 7373141119