தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து வரும் 12ம் தேதி (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாம் கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறுகிறது. இதில் 30 வயதிற்கு உட்பட்ட 10ம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமா, கலை, அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) கல்வித்தகுதி உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம்.

பாலமுருகன்.
தலைமை செய்தி ஆசிரியர்.
தமிழ்மலர்.