அச்சுறுத்தல்,மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சமாட்டேன்-முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அச்சுறுத்தல்,மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சமாட்டேன்; எதையும் சந்திக்கத் தயார் – முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்தார். அப்போது அதிமுக கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை; பேச்சு வார்த்தைக்கு பின் தொகுதி பங்கீடு பற்றி அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது:-

எள்முனை அளவுக்கு கூட அதிமுகவில் பிளவு இல்லை. ஒற்றுமையாகவே உள்ளோம். கட்சிக்கு விரோதமாக செயல்படுபவர்கள் நீக்கம் செய்யப்படுவது எல்லா கட்சியிலும் உள்ள நடைமுறைதான். 

அ.ம.மு.க. கட்சியில் இருந்து விலகி யாராவது இணைய முன்வந்தால் அதிமுக தலைமை முடிவு எடுக்கும்.கட்சியில் இல்லாதவர்களை பற்றி நாங்கள் ஏன் பேச வேண்டும். அச்சுறுத்தல் என்ற பேச்சுக்கே இடம் இல்லை ; நான் எதையும் சந்திக்க தயார்

நான் செல்லும் இடங்களில் மக்கள் எழுச்சியுடன் கூடுகின்றனர்; மீண்டும் அதிமுக வெற்றி பெற்றி ஆட்சி அமைக்கும். அரசு ஊழியர்களுக்கு அதிகமான சலுகை அதிமுக ஆட்சியில் தான் கிடைத்துள்ளது. ஜனநாயக நாட்டில் யாரும்  அடக்குமுறையில் ஈடுபடவில்லை

ஊழல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் நடைமுறையில் உள்ளன. சிறப்பு நீதிமன்றங்களில் திமுக  முன்னாள் அமைச்சர்கள் 13 பேர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது மு.க.ஸ்டாலினுக்கு தெரியாதா?  

மத்தியில் கூட்டணியில் இருந்த போது, திமுக எந்த நன்மையும் செய்யவில்லை என கூறினார்.

செய்தி ரஸாக்