சசிகலா அணியில் பாமாக,கூட்டணி இல்லை! ராமதாஸ்?
சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து கடந்த 27-ந் தேதி விடுதலை செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2 வாரங்கள் பெங்களூருவில் தங்கியிருந்த அவர், கடந்த 8-ந் தேதி (நேற்று முன்தினம்) சென்னை திரும்பினார். அவருக்கு அமமுக கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கர்நாடக தமிழ் நாடு எல்லையில் தொடங்கி அவர் தங்கும் தி.நகர் இல்லம் வரை கட்சி தொண்டர்கள் அவருக்கு மலர் தூவி, மேளம் வைத்து, ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர்.
இவரின் வருகையால் சென்னையே கோலாகலமாக காட்சியளித்தது. இந்த கொண்டாட்டத்திற்கு காவல்துறையினர் தடை விதித்திருந்தாலும், அதை துளிகூட மதிக்காத கட்சித் தொண்டர்கள், விதிமுறைக்க்கு மாறாக பட்டாசு வெடித்தும், பேனர் வைத்தும், தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சசிகலாவுக்கு கிடைத்த இந்த வரவேற்பால் ஆளும் அதிமுக கட்சி கலகத்தில் உள்ள நிலையில், சசிகலாவுக்கு கொடுத்த வரவேற்பு ஒரு தெரு நாடகம் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அதிரடியாக டவிட் செய்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் முக்கிய கட்சியாக திகழும் பாமகவுடன் தற்போது ஆளும் அதிமுக அரசு கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. ஆனால் வன்னியர்கள் இடஒதுக்கீடு தொடர்பாக பாமக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றினால் மட்டுமே கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்த முடியும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருந்தார். ஆனாலும் தற்போது இட ஒதுக்கீடு குறித்து தமிழக அரசு எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை என்றாலும், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சசிகலாவின் சென்னை வருகை அதிமுகவில் ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ‘தெரு நாடகங்களைக் காண வேண்டும் என்ற சென்னை மக்களின் நீண்டகால ஆசை நிறைவேறியது’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட் செய்துள்ளார். அவரின் இந்த கருத்து சசிகலா மீதான அவரது பகையை காட்டுகிறது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது. ராதமாஸின் இந்த ட்விட் மூலம், சசிகலா அதிமுகவில் இணைந்தலோ, அல்லது வேறு எந்த கட்சியில் இருந்தாலும், அவருடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை என்று குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், வில்லுபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, சசிகலாவின் வருகை அதிமுக அல்லது பாஜகவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ‘சசிகலா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள சசிகலா, ப்ரி பேர்டு (FREE BIRD), ஆனால் அதிமுக அல்லது பாஜகவுடன் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை’ தெரிவித்துள்ளார். மேலும் சசிகலா அம்முகவில், டி.டி.வி தினகரனின் தற்போதைய நிலையை மாற்றலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பாஜனவின் பி டீம் அதிமுக என்று திமுக எம்பி கனிமொழியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள, எச். ராஜா, அதிமுக பாஜகவின் ‘பி’ அணி அல்ல. நாஙகள் இருவரும் ஒரே அணியில் இருக்கின்றனர். ‘எங்கள் கூட்டணியில் அத்தகைய பி அணி இல்லை. அதிமுகவும் பாஜகவும் ஒரே அணியில் உள்ளன. அதிமுக மற்றும் பாஜக இடையே இடப் பகிர்வு விரைவில் முடிவு செய்யப்படும் என்று கூறிய அவர், நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே சீட் பகிர்வு சுமூகமாக நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்