சசிகலாவை வழிமறித்து நோட்டீஸ் கொடுத்த டிஎஸ்பி-க்கு எதிராக வழக்கு.
சென்னை: பெங்களூருவில் இருந்து தமிழகம் திரும்பிய சசிகலாவை வழிமறித்து நோட்டீஸ் கொடுத்த டிஎஸ்பி-க்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என சசிகலாவுக்கு கிருஷ்ணகிரி போலீஸ் டிஎஸ்பி சரவணன் நோட்டீஸ் கொடுத்தார். கிருஷ்ணகிரி டிஎஸ்பி சரவணன் மீது துறை ரீதியாக நடவடிக்கை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் டி.ஆர்.பிரபாகரன் தாக்கல் செய்த மனு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்