திமுக மூத்த நிர்வாகியின் வீட்டுக்கு..

திமுக மூத்த நிர்வாகியின் வீட்டுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் சென்றார்.

நெல்லை : ‘பத்தமடை பரமசிவம் வீடு இந்த ஏரியால தான இருக்கு… வண்டிய அங்க விடு” என்று திமுக மூத்த நிர்வாகியின் வீட்டுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் சென்றார். அவரை இன்முகத்துடன் வரவேற்ற பரமசிவம், உரிமையோடு கையை பிடித்து இழுத்து வீட்டிற்கு கூட்டி சென்றார். இந்த புகைப்படம் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திமுக தலைவர் முக ஸ்டாலின் விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தமிகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் ஸ்டாலின், அம்பை சட்டமன்ற தொகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
நலம் விசாரிப்பார்

பொதுவாக மறைந்த முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி தேர்தல் பிரச்சாரங்களுக்காக மற்றும் சென்னை தவிர பிற ஊர்களுக்கு நிகழ்ச்கிளுக்கு சென்றால், திமுகவின் வயதில் மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து நலம் விசாரிப்பது வழக்கம். அத்துடன் அவர்களுடன் உரிமையாக பழகி நட்பு பாராட்டுவார்.

வண்டியை விடு?

அந்த வகையில் அம்பை சட்டமன்ற தொகுதிக்கு சென்று பிரச்சாரம் செய்த முக ஸ்டாலின், பிரச்சாரம் செல்லும் வழியில் “பத்தமடை பரமசிவம் வீடு இந்த ஏரியால தான இருக்கு… வண்டிய அங்க விடு… பாத்துட்டு போவோம்” என்று இல்லத்திற்கு நேரில் சென்றார்

உரிமையாடு கையை பிடித்தார்?

இதை பார்த்து பூரித்துப்போன பத்தமடை பரமசிவம், ஸ்டாலினின் கையை பிடித்து உரிமையோடு வீட்டிற்குள் அழைத்து சென்றார். பழைய நினைவுகளை அசைபோட்ட படி இருவரும் பேசினார்கள். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திமுகவினர் வைரல்?

திமுகவினர் இந்த புகைப்படங்களை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து,. தி.மு.க. எங்கள் குடும்பம் … பலதரப்பட்ட மனித மனங்களின் கூட்டு கலவையான தி.மு.க. ஒரு குடும்ப கட்சி தான் என்று பதிவிட்டு வருகிறார்கள். ஸ்டாலின் மட்டுமின்றி, உதயநிதி ஸ்டாலினும் திமுகவின் மூத்த உறுப்பினர்களை சந்தித்து வருகிறார்.

‌S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்