போலீஸ் பாதுகாப்பு! வாபஸ்.

அதிமுக தலைமை கழகத்தில் போலீஸ் பாதுகாப்பு! வாபஸ்.

சென்னை அதிமுக தலைமைக் கழகத்தில் குவிக்கப்பட்டு இருந்த ஏராளமான போலீசார் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளனர்.

சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து பெங்களூருவில் இருந்து சசிகலா இன்று காலை சென்னை திரும்பி வந்து கொண்டுள்ளார். பெங்களூருவில் அவர் தங்கியிருந்த தனியார் விடுதியில் இருந்து இன்று காலை அவர் காரில் புறப்பட்டார். அவரது காரில் அதிமுக கொடி பட்டொளிவீசி பறந்தது. ஏற்கனவே, அதிமுக அமைச்சர்களின் புகார் காரணமாக சசிகலா தனது காரில் அதிமுக கொடி கட்ட போலீசார் தடை விதித்துள்ளனர். மேலும், அவரது காரில் கொடியை அகற்றவேண்டும் என போலீசார் தரப்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

மேலும், அதிமுக அலுவலகம், ஜெயலலிதா நினைவிடம் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கட்சி அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் 3 இடங்களில் தடுப்பு வேலிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு தடுப்பிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வழக்கமாக கட்சி அலுவலகத்தில் 5 போலீசார் பாதுகாப்பிற்காக அமர்த்தப்பட்டு வந்த நிலையில் தற்போது 50 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஆங்காங்கே சிசிடி கேமரா அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் இருந்து குவிக்கப்பட்டு இருந்த ஏராளமான போலீசார் தற்போது படிப்படியாக வாபஸ் பெறப்பட்டு வருகின்றனர். இதனால், காவல்துறையினர் இன்றி அமைதியான முறையில் அதிமுக அலுவலகம் காட்சி தருகிறது.

S. முஹமது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்