ரூ 2 லட்சம் நிதி உதவி…

உத்தரகண்ட் வெள்ளத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி… பிரதமர் அறிவிப்பு!

உத்தரகண்ட் சாமோலியில் பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிர் இழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ;2 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறுகையில், உத்தரகண்ட் சாமோலியில் பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிர் இழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ;2 லட்சம் வழங்கப்படும். பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

செய்தியாளர்
அன்சாரி