சசிகலா தலைமையில் பேரணி..

சென்னையில் சசிகலா தலைமையில் பேரணி நடத்த
அனுமதி கேட்டு சென்னை காவல்துறையில் மனு
அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை
நிறைவடைந்து கடந்த 27 ஆம் தேதி சசிகலா
விடுதலையான நிலையில், நாளை மறுநாள் அவர்
சென்னை வர உள்ளார்.
சசிகலாவை வரவேற்பதற்காக அமமுக கட்சியினர் தீவிர
ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். சசிகலா வருகையை
முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் பலர் வாழ்த்து
போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.
சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டியவர்களை அதிமுக
தலைமை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்து
வருகிறது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், அ.ம.மு.க. துணை
பொதுச்செயலாளருமான செந்தமிழன் சார்பில்,
சென்னையில் போரூர் முதல் 12 இடங்களில் சசிகலாவுக்கு
வரவேற்பு அளிக்கவும் பேரணி நடத்தவும்
அனுமதி கேட்டு சென்னை காவல்துறையில் மனு
அளிக்கப்பட்டுள்ளது. சசிகலா தலைமையில் நடத்தப்படும்
பேரணியில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர்
பங்கேற்பார்கள் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா நினைவிடம் வரை சசிகலா தலைமையில்
பேரணி செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மனுவை பரிசீலித்து சட்டப்பூர்வமாக
நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்
செய்யது அலி