அறநிலையத் துறை அறிக்கை வெளியீடு!
தமிழக அரசு அறநிலையத் துறை அறிக்கை வெளியீடு!
பழனி பஞ்சாமிர்தம் ரூபாய் 250 செலுத்தினால் பார்சலில் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும் என தமிழக அரசின் அறநிலையத் துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அளித்த அறிக்கையில், இந்து சமய அறநிலைதுறை சார்பாக பக்தர்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி
கே.பழனிச்சாமி தலைமையிலான அம்மாவின் அரசு செய்து வருகின்றது. பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க பழநி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் பிரசித்திபெற்ற பஞ்சாமிருதம் தபால் மூலம் பக்தர்களுக்கு அனுப்பி வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு தமிழ்நாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.