ஜெயலலிதா பல்கலைக்கழகம்.
ஜெயலலிதா பல்கலைக்கழகம்”
சட்டப்பேரவையில் இன்று மசோதா தாக்கல்?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க இன்று சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 2 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்தாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மறைந்த 25 எம்எல்ஏக்கள்.
அமைச்சர் துரைக்கண்ணு, பாடகர் எஸ்.பி.பி. ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று விழுப்புரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க இன்று சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. வேலூர் திருவள்ளூர் பல்கலைக்கழகத்தை பிரித்து, ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவாக்கப்படுகிறது. விழுப்புரம் ,கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் கூடியசட்டப்பேரவை கூட்டத்த்தொடரில், விதி எண் 110-ன் கீழ் வேலூரில் அமைந்துள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகம் 2 ஆக பிரிக்கப்பட்டு புதிய பல்கலைக்கழகம் விழுப்புரத்தில் அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
N. அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.