பா.ம.க. இருக்கும் கூட்டணியில்…

பா.ம.க. இருக்கும் கூட்டணியில் இணைய எவ்வித
பிரச்சினையும் இல்லை!
எல்.கே.சுதீஸ்?

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் என்னென்ன என்பது குறித்து இன்னும் ஒரு சில நாட்களில் தெரியவரும் என்று தெரிகிறது
இந்த நிலையில் பாமக இருக்கும் கூட்டணியில் இடம்பெற மாட்டோம் என தேமுதிக சமீபத்தில் அறிவித்த நிலையில் தற்போது அக்கட்சியின் முக்கிய பிரமுகர் எல்.கே. சுதீஷ் அவர்கள் அளித்த பேட்டியின்போது பாமக இருக்கும் கூட்டணியில் இடம்பெற தேமுதிகவுக்கு எந்த சிக்கலும் இல்லை என்று தெரிவித்துள்ளார்

ஆனால் அதே நேரத்தில் பாமக உடன் பேச்சுவார்த்தை நடத்தும் அதிமுக, தேமுதிக பலமுறை கேட்டுக் கொண்டும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார் பாமக உடனான கூட்டணி உறுதி செய்யப்பட்டவுடன் தான் அதிமுக, தேமுதிக உடன் பேசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.