பொதுப்பணித்துறை தடை.

எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, நினைவிடங்களைப் பார்வையிட பொதுப்பணித்துறை தடை விதித்துள்ளது.

தமிழக பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அருங்காட்சியகம், அறிவுத்திறன் பூங்கா ஆகியவற்றின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெறுவதால், சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். நினைவிடங்களைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது.

சிறையில் இருந்து விடுதலையாகியுள்ள சசிகலா, பிப்ரவரி 7- ஆம் தேதி பெங்களூருவில் இருந்து சென்னை திரும்புவார் என்றும், மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்துவார் என்றும் கூறப்பட்ட நிலையில், பொதுப்பணித்துறை இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

S. முஹமது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.