பிப்ரவரி 14ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.

பிரதமர் நரேந்திர மோடி வரும் 14ம் தேதி தமிழகம் வருகை தர உள்ளார். சென்னையில் மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டமான, வண்ணாரப் பேட்டை-திருவெற்றியூர் விம்கோ நகர் மெட்ரோ சேவையை பிரதமர் தொடங்கி வைக்கிறார். காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவதுடன், மேலும் பல்வேறு திங்டங்களையும் துவக்கி வைக்க உள்ளார்.

சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அழைப்பு விடுத்த நிலையில், பிரதமர் மோடி தமிழகத்திற்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் ரஹ்மான்