அதிமுகவுடன் கூட்டணி இல்லை? தேமுதிக முடிவு?

அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெறலாமா? இல்லை தனித்து போட்டியிடலாமா என்ற முடிவு எடுப்பதற்காக, தேமுதிகவின் பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர்கள் எல்கே சுதீஷ், பார்த்தசாரதி மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர். தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் பங்கேற்கவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளின் தேமுதிக பொறுப்பாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள், மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்கள் 320 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடலாமா?

அல்லது அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைத்து போட்டியிடலாமா என்பது குறித்து நிர்வாகிகளுடன் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆலோசனை செய்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் நமக்கு உரிய மதிப்பளிக்காவிடில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராக இருக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் இந்த கூட்டத்தில் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முக்கிய முடிவை விஜயகாந்த அறிவிப்பார் என்று பிரேமலதா விஜயகாந்த் இந்த கூட்டத்தில் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்