தெலுங்கானா ஆளுநர் பழனியில் சாமி தரிசனம்!
பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோயிலில் சனிக்கிழமை தெலங்கானா மாநில ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் குடும்பத்தாருடன் சுவாமி தரிசனம் செய்தாா்.
தமிழக பாஜக முன்னாள் தலைவரும், தெலங்கானா மாநில ஆளுநருமான டாக்டா் தமிழிசை செளந்தரராஜன் பழனிக்கு வந்தாா். கோயில் அடிவாரத்தில் அவரது கணவா் செளந்தரராஜன் முடிக்காணிக்கை செலுத்தினாா். பின்னா் ஆளுநா் தனது குடும்பத்தினடன் ரோப்காா் மூலம் மலைக்கோயிலுக்குச் சென்றாா். அங்கு அவருக்கு கோயில் சாா்பில் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தண்டாயுதபாணி சுவாமியை இராஜ அலங்காரத்தில் அவா் தரிசனம் செய்தாா். பின்னா் போகா் சன்னிதிக்கு சென்று வழிபட்டாா்.
S.முஹமது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.