தமிழகத்தில் இயங்கும் 6 சிறப்பு ரயில்கள் 5 நிமிடங்கள் நிற்க அனுமதி?

மதுரை கோட்டத்தில் இயங்கும் 6 சிறப்பு ரயில்கள் முக்கிய நிறுத்தங்களில் 5 நிமிடங்கள் நிற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிறு தொழில்முனைவோர் தங்கள் உற்பத்தி பொருட்களை அனுப்ப ஏதுவாக முக்கிய ரயில் நிலையங்களில் நிற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

செங்கோட்டை – சென்னை மற்றும் தூத்துக்குடி – மைசூர் ரயில்கள் விருதுநகர் ரயில் நிலையத்தில் 5 நிமிடம் நிற்க அனுமதி.

செங்கோட்டை – சென்னை சிலம்பு விரைவு ரயில் ராஜபாளையம் ரயில் நிலையத்தில் 5 நிமிடம் நிற்க அனுமதி.

தூத்துக்குடி – சென்னை செல்லும் முத்துநகர் சிறப்பு ரயில் சாத்தூர் ரயில் நிலையத்தில் 5 நிமிடம் நிற்க அனுமதி.

கொல்லம் – சென்னை அனந்தபுரி சிறப்பு ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் 5 நிமிடம் நிற்க அனுமதி.

பாலக்காடு – சென்னை சென்ட்ரல் ரயில் ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்தில் 5 நிமிடம் நிற்க அனுமதி.

S. முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்