உலகம் பாவை – தொடர் – 27

    27. கருத்தடிமை ஆகாதே

உருவாகும் மாந்தர் நோக்கு

உயர்கருத்து எதுவா னாலும் சருகாதல் இல்லை; ஆனால், சாறாதல்  அதனின் எல்லை;

கருவான கருத்தில், மாறும் காலத்திற் கேற்ப மாற்றம் உருவாதல் வளர்ச்சி;  இன்றேல், உயர்கருத்தும் முடமே; மண்ணில்

கருத்தெதற்கும் அடிமை அற்றுக் கருத்தெததையும் கருத்தில் கொண்டு

கருத்திற்கும் கருத்தைச்  சேர்க்கும்

கருத்துடையார் உண்மை மாந்தர்

கருத்தடிமை  ஆவார் உண்மைக் கருத்தடையார், என்றே கூறி

ஒருவுலகப் புதுப்பெண் பாடி உலாவருவாய் உலகப் பாவாய்!

பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு

நிறுவனர்

உலகத் திருக்குறள் மையம்

[8:49 AM, 1/11/2021] திருக்குறள்: உலகத் திருக்குறள் மையம், சென்னை